மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சிவகார்த்திகேயன், சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன் ஆகியோர் தயாரிக்க, சஞ்ஜய் ஜெயகுமார் மற்றும் கலையரசு இணைந்து தயாரித்து இருக்கும் படம் குரங்கு பெடல். இந்த படத்தை கமலக்கண்ணன் இயக்க கமலக்கண்ணன் மற்றும் பிரபாகர் சண்முகம் இணைந்து தயாரித்துள்ளனர். காளிவெங்கட், மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், ராகவன், ஞானசேகர், ரதிஷ், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், சாய்கணேஷ், தக்ஷனா, சாவித்திரி, செல்லா, குபேரன் ஆகியோர் குரங்கு பெடல் படத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்க, சுமீ பாஸ்கரன் ஒளிப்பதிவும், பிரபாகர் சண்முகம் வசனமும் எழுதி உள்ளனர். குரங்கு பெடல் படம் மே 3ம் தேதி வெளியாகிறது
கதை
இயக்குநரும், எழுத்தாளருமான ராசி. அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
1980களின் கோடைக்காலம். ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஒரு சிறு ஊரில் ஐந்து சிறுவர்கள் கோடை விடுமுறையில் சேர்ந்து சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். இதில் ஒரு சிறுவன் மட்டும் சைக்கிள் வாங்கிவிட மூன்று சிறுவர்கள் சைக்கிள் வாங்கிய சிறுவனுடன் சேர்ந்துகொள்கிறார்கள். மாரியப்பன் என்ற சிறுவன் மட்டும் தனித்து விடப் படுகிறான். வாடகை சைக்கிள் எடுத்து உயரம் போதாமல் குரங்கு பெடல் போட்டு சைக்கிள் கற்றுக்கொள்கிறான். இந்தச் சைக்கிள் கற்றுகொள்ளும்போது நடக்கும் நிகழ்வுகளை ஒரு மிகச் சிறந்த வாழ்க்கைச் சித்திரமாக, குழந்தைகளின் அழகான உலகத்தைப் பிரதிபலிக்கும் விதமாக ‘குரங்கு பெடல்’ படத்தின் மூலமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் கமலக்கண்ணன்.
காளி வெங்கட்டின் மண்ணின் குசும்பும், ஒரு பாசக்கார தந்தையாகவும் சிறப்பாக நடித்துள்ளார். ஐந்து சிறுவர்களின் நடிப்பும் மகச் சிறப்பாக நடித்துள்ளார்கள்.
மாரியப்பனாக நடித்துள்ள மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன் நடிக்கவில்லை சூ ழ்நிலையை உணர்ந்து கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
பிரசன்னா பாலசந்தர், ஜென்சன் திவாகர், செல்வா, சாவித்ரி என இதில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சுமி.பாஸ்கரனும், ஒலிக் கலைஞர் ஆண்டனி பி.ஜெயரூபனும் டைரக்டரின் காட்சிக்கு வடிவம் தந்துள்ளார்கள்.
ஜிப்ரான் இசை ரசிக்க வைக்கிறது.
இயக்குநர் கமலகண்ணணன் இன்றைய சிறுவர்களுக்கு குரங்குபெடல் என்னவென்று அழகாக காட்சிகள் அமைத்து எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியுள்ளார்.பாராட்டுக்கள்.