ராஜ் தேவ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், பிரியங்கா திம்மேஷ், ஹரிஷ்பேரிடி, நிகரிகா பெட்ரோ,மங்கன்செரி மற்றும் பலர் நடித்து வெளியிகியிருக்கும் படம் சத்தமின்றி முத்தம் தா. இசை ஜுபின் ஒளிப்பதிவு யுவராஜ் மனோகரன் எடிட்டிங் மதன்
கதை
படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகி பிரியங்கா திம்மேஷ்ஷை மர்ம நபர் அவர் வீட்டில் கொல்ல வர அவரிடமிரூந்து தப்பிக்க வீட்டிலிருந்து வெளியே வந்து சாலையில் ஓடும்போது மர்ம நபர் ஆக்ஸிடெண்ட்செய்கிறார். ஆக்ஸிடெண்டில்உயிருக்கு போராடும் பிரியங்கா திம்மேஷை கான்ட்ராக் கொலையாளியான ஸ்ரீகாந்த் ஆஸ்பிட்டல் கொண்டு சென்று தான்தான் கணவர் என்று சொல்லி அவரை காப்பாற்றுகிறார்.போலீஸ் விசாரனையில் ஸ்ரீகாந்த் உண்மையான கணவர் இல்லை எனவும் போலீஸ் தேடும் காண்ட்ராக்ட் கொலைகாரன் என தெரிய வருகிறது. பிரியங்கா திம்மேஷை கொல்ல வந்த மர்ம நபர் யார்? எதற்காக கொல்ல வந்தார்? ஸ்ரீகாந்த் கான்ட்ராக் கொலையாளியாக ஏன் மாறினார்? பிரியங்கா திம்மேஷை தன் மனைவி என்று ஏன் சொன்னார்? என்பதே படத்தின் சுவாரஸ்யமான திரைக்கதை.
ஸ்ரீகாந்த் மாறுபட்ட வேடத்தில் கதாநாயகனாக சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியாக பிரியங்கா திம்மேஸ் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தைநன்றாக செய்துள்ளார். போலிஸ் அதிகாரியாக ஹிரிஷ் பேரடி சிறப்பாக நடித்துள்ளார்.
நிகரிகா பெட்ரோ, மங்கன்செரி என இதில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள்.
யுவராஜ் மனோகரனின் ஒளிப்பதிவு அருமை. ஜுபின் இசையில் பாடல்களூம் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது.
இயக்குநர் ராஜ் தேவ் கிரைம் திரில்லர் கதையை எல்லோரும் ரசிக்கும்படி சுவார்யமாக சொல்லி வெற்றி படமாக கொடுத்துள்ளார்பாராட்டுக்கள்.