வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருண், கிருஷ்ணா, ராஹே மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ஜோஷ்வா இமை போல் காக்க’.
இசை கார்த்திக்
ஒளிப்பதிவு எஸ்ஆர் கதிர்
எடிட்டிங்: ஆண்டனி,
கதை
கான்ட்ராக்டில் பணத்துக்காககொலை செய்யும் மிக திறமையான கதாநாயகன் வருண் கதாநாயகி வழக்கறிஞரான ரஹே மீது காதல் கொள்கிறார். தான் யாரென்ற உண்மையை சொல்கிறார். இனி கொலை செய்யவில்லை உனக்காக மாறிக்கொள்கிறேன் என்று சொல்கிறார். கொலைகாரன் என்று தெரிந்து கொண்ட ரஹே வருணை பிரிந்து செல்கிறார். வருண் கொலை செய்யும் வேலையை விட்டு விட்டு உயரடுக்கு மெய்க்காப்பாளராக மாறுகிறார், வருண். முக்கிய நபர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக ஒரு உயர் பாதுகாப்பு நிறுவனத்துடன் பணிபுரிகிறார் வருண். ஒரு நாள், கதாநாயகி ரஹேவைக் கொல்லத் தேடும் ஒரு பணக்கார மற்றும் சக்திவாய்ந்த மெக்சிகன் போதைப்பொருள் பிரபுவிடமிருந்து ரஹேவை பாதுகாக்கும் வேலையைப் பெறுகிறார் வருண். மெக்சிகன் போதைப் பொருள் பிரபு ஏன் அவளைக் கொல்ல விரும்புகிறார்?
ரஹேவின் உயிருக்கு ஆபத்து என வருணுக்கு தெரிந்து கொலைக் கும்பளிடமிருந்து ரஹேவை காப்பாற்றினாரா? இல்லையா?
வருண், ரஹே காதலர்கள் மீண்டும் இணைந்தார்களா? இல்லையா?
என்பதே படத்தின் முழுநீள ஆக்ஷன் கதை.
வருண் கதாநாயகனாக நடிப்பிலும், ரொமான்ஸ் காட்சிகளிலும், நடனத்திலும் சண்டைக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியாக ரஹே நடிப்பிலும் ரொமான்ஸ் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். கிருஷ்ணாவின் நடிப்பும் சண்டைக் காட்சியும் அசத்தல். திவ்யதர்ஷினி (DD) சிறப்பாக நடித்துள்ளார். மன்சூரளிகான், கிட்டி கிருஷ்ணமூர்த்தி, லிசி என இதில் நடித்திருக்கும் அனைவருமேகொடுத்த கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்கள். எஸ் ஆர் கதிரின் ஒளிப்பதிவு படத்திற்கு வலு சேர்த்துள்ளது. ஆண்டனியின் எடிட்டிங் ஷார்ப். கார்த்திக் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு காதல் கதையை ஆக்ஷன் முலம் விறுவிறுப்பாக எல்லோரும் ரசிக்கும்படி அவனது பாணியில் சுவாராஸ்யமாக சொல்லியிருக்கிறார் பாராட்டுக்கள்.