Take a fresh look at your lifestyle.

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

52

எரும சாணி புகழ் ரமேஷ் வெங்கட் இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’. சத்தியமூர்த்தி, யூடியூபர்கள் விஜய், ஹரிஜா, ‘பரிதாபங்கள்’ கோபி-சுதாகர், கார்த்திக், ரித்விகா, யாஷிகா ஆனந்த், முனிஷ்காந்த், ஷாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜோஷுவா ஜெ பெரேஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு கவுஷிக் கிரிஷ் இசை அமைத்துள்ளார். டிசம்பர் 29-ம்தேதி வெளியாகியிருக்கும் படம்

கதை

படம் பார்க்கத் திரையரங்குக்கு வரும் சிலர் அங்கிருக்கும் நான்கு பேயிடம் மாட்டிக்கொள்கிறார்கள். அவற்றின் பிடியில் இருந்து ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கலகலப்பாகச் சொல்லியிருக்கும் படம்.

இந்த படத்தில் சத்தியமூர்த்தி, யூடியூபர்கள் விஜய், ஹரிஜா, ‘பரிதாபங்கள்’ கோபி-சுதாகர், கார்த்திக், ரித்விகா, யாஷிகா ஆனந்த், மதுமிதா, ஷாரா என நிறைய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
முனிஷ்காந்த் வில்லனாக சிறப்பாக நடித்திருக்கிறார். 80 சதவிகித காட்சிகள் திரையரங்கில்தான் நடக்கிறது அதை சிறப்பாக ஓளிப்பதிவு செய்துள்ளார் ஜோஷுவா ஜெ பெரேஸ்.கவுஷிக் கிரிஷ்
இசை ரசிக்கவைக்கிறது.

பொதுவாக ஹாரர் காமெடிக்கென இருக்கும் ‘டெம்பிளேட்’ இதில் இருந்தாலும் பேய் விஷயத்தில் புதுமை இருக்கும்படி முழு பொழுதுபோக்கு படமாக எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக கொடுத்துள்ளார் இயக்குநர் ரமேஷ் வெங்கட். பார்க்கலாம்.