Take a fresh look at your lifestyle.

Dunki Movie Booking Open

50

*ஷாருக்கானின் ‘டங்கி’ திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கி இருக்கிறது.*

உங்களின் அன்புக்குரியவர்களுடன் இணைந்து, இந்த ஆண்டின் மிகவும் மனதைக் கவரும் திரைப்படம் ஒன்றை காண தயாராகுங்கள்…!

ராஜ்குமார் ஹிரானியின் ‘டங்கி’ திரைப்படத்தின் வெளியீடு நெருங்கி வரும் தருணத்தில்… இப்படத்தை காண்பதற்கான ரசிகர்களின் உற்சாகம் தொடர்ந்து உச்சத்தை எட்டி வருகிறது.‌ இப்படத்தில் இடம்பெற்ற மெல்லிசை பாடல்கள்…பாராட்டினைப் பெற்றிருக்கும் முன்னோட்டம்… ராஜ்குமார் ஹிரானி உருவாக்கிய இதயத்தை தூண்டும் உலகத்தைப் பற்றிய பரந்த பார்வையை வழங்கியதால்… இது தொடர்பாக பார்வையாளர்களிடமிருந்து அபிரிமிதமான அன்பை.. ‘டங்கி’ பெற்றிருக்கிறது.‌

உலகம் முழுவதும் இந்த படைப்பை காண்பதற்கான முன்பதிவுகள் நிரம்பி வழிவதை காண முடிகிறது. மேலும் அட்வான்ஸ் புக்கிங் மூலம் பார்வையாளர்களின் பேரன்பும் வெளிப்பட தொடங்கியுள்ளது.

‘டங்கி’ படத்தின் முன்பதிவுகள் வெளிநாடுகளில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சாதனை படைத்து வருகிறது. இதன் காரணமாக ஷாருக்கானின் ‘பதான்’ பின் தங்கியுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு மீண்டும் ‘கிங்கான்’ ஷாருக் கான் Vs ஷாருக் கான் தான் என்பது உறுதியாகிறது.

ஷாருக்கானுடன் பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர். உள்ளிட்ட திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வண்ணமயமான கதாபாத்திரங்களுடன் ‘டங்கி’யில் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் கதை எழுதி இருக்கிறார்கள். இந்த திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.