‘அனிமல்’ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது!
CHENNAI:
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவான ‘அனிமல்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை கண்டிராத காட்சிகள் மற்றும் பாடல்கள் இடம்பிடித்திருந்ததால் பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது. இதில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தானா, பாபி தியோல், அனில் கபூர் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்திருப்பதால் இப்படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
இப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங்கிற்கு கிடைத்த அமோகமான வரவேற்பே இந்த உற்சாகத்திற்கு மிகப்பெரும் ஆதாரம். பூஷன் குமார் தயாரிப்பில் உருவான ‘அனிமல்’ எனும் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களுக்குள் 10,000 டிக்கெட்டுகள் விற்பனையாகின. அதன் பின்னர் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 10,000 டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகிறது.
மிகச் சில இந்திய திரைப்படங்களின் முன்பதிவுகள் இந்த வகையான வரவேற்பைப் பெற்றிருக்கும். அதனால் இந்த திரைப்படம் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட். ‘அனிமல்’ திரைப்படம் என்னவாக இருக்கும் என்பதை மட்டுமே இந்த டிக்கெட் முன்பதிவு நிரூபிக்கிறது. பூஷன் குமார் மற்றும் கிரிஷன்குமாரின் டி சீரீஸ், முராத் கெடானியின் சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் ஆகியவை இணைந்து ‘அனிமல்’ திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். கிரைம் டிராமா ஜானரிலான இந்த திரைப்படம் டிசம்பர் ஒன்றாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, பார்வையாளர்களை பரபரப்பான பயணத்தில் அழைத்துச் செல்லும் என உறுதியளிக்கிறது.
Animal advance bookings open to a roaring response, with 10 thousand tickets being sold per hour
The stir that the Animal trailer has created amongst fans is something never seen before. While the Sandeep Reddy Vanga film’s glimpses and songs have seen a great response people are surely excited to watch the Ranbir Kapoor, Rashmika Mandanna, Bobby Deol, and Anil Kapoor starrer on the big screen.
The biggest proof of this excitement has just been witnessed with the crazy response the film’s advance booking has got. Bhushan Kumar produced Animal’s advance bookings opened a few hours back and since then 10000 tickets have been getting sold every hour.
Very few Indian films advance bookings have seen this kind of a frenzy. This only proves what a blockbuster Animal might be. Bhushan Kumar and Krishan Kumar’s T-Series, Murad Khetani’s Cine1 Studios and Pranay Reddy Vanga’s Bhadrakali Pictures have backed Animal. The film is in the crime drama genre and promises to take viewers on a thrilling ride on 1st December 2023.