அல்லு அரவிந்த் வழங்கும் நாக சைதன்யா அக்கினேனி – சந்து மொண்டேட்டி – பன்னி வாசு – கீதா ஆர்ட்ஸுடன் இணைந்து உருவாக்கும் ‘தண்டேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது!
CHENNAI:
‘யுவ சாம்ராட்’ நாக சைதன்யா மற்றும் இயக்குநர் சந்து மொண்டேட்டி இணைந்து பணியாற்றும் #NC23 எனும் திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அல்லு அரவிந்த் வழங்க, தயாரிப்பாளர் பன்னி வாசு தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் டிசம்பரில் தொடங்குகிறது. திறமை வாய்ந்த நட்சத்திர நடிகரான நாக சைதன்யா நடிப்பில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் இந்த திரைப்படமும் ஒன்றாகும். அதே தருணத்தில் இயக்குநர் சந்து மொண்டேட்டி, ‘கார்த்திகேயா 2’ படத்தின் மூலம் பான் இந்திய பிளாக் பஸ்டரை வழங்கியவர். மேலும் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் பல வெற்றிகளை வழங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இதுவரை கண்டிராத தோற்றத்தில் நடிக்கும் நாக சைதன்யாவிற்கு இந்தத் திரைப்படம், இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் திரைப்படமாக இருக்கும்.
நடிகர் நாக சைதன்யா தனது பிறந்த நாளை நாளை கொண்டாடுகிறார். இருப்பினும் அவரது பிறந்த நாளுக்காக ஒரு நாள் முன் தயாரிப்பாளர்கள் அவருடைய ரசிகர்களுக்கு பெரிய பரிசினை வழங்கி இருக்கிறார்கள். அவர் தற்போது நடித்து வரும் படத்திற்கு ‘தண்டேல்’ எனும் ஆற்றல் மிக்க தலைப்பினை அறிவித்து, அதனுடன் ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டிருக்கிறார்கள். தண்டேல் என்றால் ஆற்றல் மிக்கவர்… கவர்ச்சியானவர்… லட்சியத்தையும், கவனத்தையும் கொண்டவர்… ஒருவருக்கு ஏதாவது ஒரு உண்மையான ஆசை இருந்தால் அதற்காக அனைத்தையும் கொடுக்க முடியும் எனப் பொருள் கொள்ளலாம்.
நாக சைதன்யா இந்த திரைப்படத்தில் மீனவராக நடிக்கிறார். இந்த தோற்றத்திற்காக கடந்த சில மாதங்களாக தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டார். ஃபர்ஸ்ட் லுக்கில் அவர் நீண்ட முடி மற்றும் தாடி உடன் முரட்டுத்தனமான தோற்றத்தையும் கொண்டிருக்கிறார். கையில் துடுப்புடன் ஒரு படகில் அமர்ந்திருக்கும் நாக சைதன்யா- வேட்டி அணிந்து, தனது செதுக்கப்பட்ட உடலமைப்பை கதாபாத்திர தோற்றத்திற்காக தீவிரமாக பார்ப்பது போல் தோன்றுகிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் – படத்தின் தலைப்பை போல் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் தொடங்கவில்லை என்றாலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படத்தின் கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும் படப்பிடிப்பு பெரும்பாலும் அசலான இடங்களில் நடைபெறுகிறது. இந்த திரைப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். சூப்பர் ஹிட்டான ‘லவ் ஸ்டோரி’க்குப் பிறகு இருவரும் இணைந்துள்ள இரண்டாவது படம் இது. ‘தண்டேல்’ என்பது முற்றிலும் மாறுபட்ட பின்னணியைக் கொண்ட காதல் கதை.
இப்படத்தின் கதையில் இசைக்கு நல்ல வாய்ப்பு இருப்பதால் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த காதல் கதைக்காக பிரத்யேகமாக இசையமைக்கிறார். ஷாம் தத் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ஸ்ரீ நாகேந்திர தாங்கலா கலை இயக்கத்தை கவனிக்கிறார்.
படப்பிடிப்பிற்கு முன்னதான பணிகளில் படக் குழு போதுமான நேரத்தை செலவிட்டுள்ளதால்..இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது.
Allu Aravind Presents- Naga Chaitanya Akkineni, Chandoo Mondeti, Bunny Vasu, Geetha Arts- Thandel First Look Unleashed
Yuva Samrat Naga Chaitanya and director Chandoo Mondeti’s crazy project #NC23 to be produced by Bunny Vasu and presented by Allu Aravind on the Geetha Arts banner will start rolling in December. This is one of the most awaited movies given Naga Chaitanya is one of the versatile stars, whereas Chandoo Mondeti delivered a Pan India blockbuster with his last Karthikeya 2, and Geetha Arts is one of the leading production houses in India that delivered numerous hits. #NC23 will be the most expensive movie for Naga Chaitanya who will be seen in a never-seen-before avatar.
Naga Chaitanya celebrates his birthday tomorrow. However, the makers provided a big treat a day prior to his birthday. They announced a powerful title, Thandel, and also launched the first look poster. Thandel means energetic, charismatic, ambitious, and focused. If a person has a true passion for something, he can give everything for it.
Naga Chaitanya switched to beast mode to play a fisherman in the movie and has undergone intense workouts for the last few months to gain this muscular look. He sports a rugged look with long hair and beard. Sitting on a boat with an oar in his hand, Naga Chaitanya is seen giving a stern gaze in the first-look poster flaunting his chiseled physique in a vest. The first look poster is as arresting as the title and it generates a lot of inquisitiveness for the movie, though it is yet to go on set.
The story of the movie is based on real incidents and the shoot will mostly take place in original locations. Paired opposite Naga Chaitanya in the movie is Sai Pallavi and this is their second movie together, after the superhit Love Story. Thandel is also a love story with a completely different backdrop.
The makers zeroed in on well-known technicians to handle different crafts. As the story has a good scope for music, National-award-winning composer- Rockstar Devi Sri Prasad is roped in to beautify the love story with his soundtracks and score. Shamdat will crank the camera to offer a visual spectacle. Srinagendra Tangala will look after the art department.
The team has spent enough time on the pre-production work and the regular shoot begins in December.