சென்னை:
உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் நாயகன் படத்திற்கு பிறகு அதாவது கிட்ட தட்ட 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைகிறார்கள். இதனால் இந்த படத்தை தயாரிக்க பல முன்னனி நிறுவனங்கள் தயாரிக்க போட்டி போடுகிறார்கள் அனால் கடைசியாக இந்த படத்தை கமல்ஹாசனின் ராராஜ்கமல் இன்டெர் நேஷனல் பிலிம் ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்றும் மணிரத்தினத்தின் மதராஸ் டாக்கீஸ் மூவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்த படத்தின் இசையை ஏ.ஆர்.ரகுமான் இசைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய எடிட்டிங் வேலையை ஸ்ரீகர்.பிரசாத் செய்ய சண்டை பயிற்சியை அன்பறிவு என இன்னும் பல முக்கியமான தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த மெகா கூட்டணியிடன் இணைகிறார்கள்.
நவம்பர் 7ம் தேதி உலகநாயகன் கமல்ஹாசனின் 69 வது பிறந்த நாள் முன்னிட்டு ‘K H 234’ டைட்டில் அறிவிப்பு வீடியோ மணிக்கு இயக்குனர் மணிரத்தினம் பிரத்யேகமாக வெளியிடுகிறார்.
தன் நடிப்பில் சிறந்து விளங்கிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு உலகநாயகன் கமலஹாசன் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து இன்று புகழின் உச்சியில் இருக்கிறார். இந்திய சினிமா துறையில் பல புதுமைகளை புகுத்தி தன் நடிப்புத் திறனால் மக்கள் மனதை கவர்ந்தவர் கமலஹாசன். “உணர்ச்சிகள்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, பலவித வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, இத்திரையுலகில் பல வித இன்னல்களை அனுபவித்தாலும், முன்னேற்ற பாதை கரடு முரடாக இருந்தாலும் அதை எல்லாம் தாண்டி பெரிய அளவில் வெற்றி பெற்று இன்று 69 ஆவது பிறந்தநாள் விழாவை மிக சிறப்பாக கொண்டாடினார்..
அவர் அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு அவர் தன்னுடைய பிறந்தநாளை இதுவரையில் சிறப்பாக கொண்டாடியது இல்லை. ஆனால் இந்த வருடம் தனது பிறந்த நாளை பத்திரிகையாளர்கள் மத்தியிலும், தன் ரசிகர்கள் மத்தியிலும், தன் கட்சியினர் மத்தியிலும் மிகச் சிறப்பாக அனைவரும் போற்றும்படி கொண்டாடி மகிழ்ந்தார். உலகநாயகன் கமலஹாசன் இன்று பிறந்தநாள் கொண்டாடிய, உலகநாயகன் கமலஹாசனுக்கு நமது ‘திரைநீதி மீடியா’ சார்பாக நீண்ட நெடு நாட்கள் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறோம்.