CHENNAI:
உதவி இயக்குநரான பணி புரிந்துக் கொண்டிருக்கும் கதாநாயகன் சச்சின் ஒரு சினிமாவை இயக்குவதற்காக வாய்ப்பு தேடி வந்த சமயத்தில. ஒரு திகில் கதையை படமாக இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபடும் நாயகன் சச்சின் ஒரு தயாரிப்பாளரிடம் அக் கதையை சொல்ல,,, திகில் நிறைந்த அந்த கதையை படமாக இயக்கும் வாய்ப்பு சச்சினுக்கு கிடைக்கிறது. அந்த படத்தின் கதை, திரைகதை இயக்குவதற்கான பணிகளில் ஈடுபடுபவர், புதிய வாடகை வீட்டில் குடியேறுகிறார். ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் அந்த வீட்டுக்கு சென்ற, அவருக்கு பயங்கரமான கனவுகள் மற்றும் சில அமானுஷ்யமான சம்பவங்களால் தூக்கம் இல்லாமல், மன அழுத்தத்திற்கு ஆளாகிறார். அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் அந்த வீட்டில் ஏற்கனவே இரண்டு குடும்பங்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதால் அந்த இடத்தில் ஆவிகள் இருப்பது சச்சினுக்கு தெரியவில்லை.
தனது நிலை குறித்து மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகும் சச்சினின் ஒவ்வொரு நாளும் மிக பயங்கரமானதாகவே இருக்கிறது. தன் வீட்டில் இருக்கும் மர்மம் என்ன என்பதை அறிய உயிருக்கு துணிந்து சச்சின் கண்டுபிடிக்க முயலும்போது, பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வருகிறது. ஒரு கட்டத்தில் அந்த வீட்டில் இறந்து போன ஆவிகள் உலா வருவதால், அவர்களைப்பற்றி தெரிந்துக்கொள்ள முயற்சிக்கும் சச்சினுக்கு அதிர்ச்சிகரமான சம்பவங்கள் அவரது கண் முன்னே தெரிகிறது. இந்த சூழ்நிலையில் அந்த பேய் வீட்டிலிருந்து சச்சின் தப்பித்தாரா? பட இயக்குனராகும் கனவு நிறைவேறியதா ? என்பதுதான் “டீமன்’ திரைப்படத்தின் மீதிக் கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் சச்சின் மிகவும் அற்புதமாக நடித்துள்ளார். அவருடைய தோற்றத்தில் உடல் மொழியில் கதாபாத்திரத்திற்கும் மிகவும் அருமையாக பொருத்தமாக இருக்கிறார். இந்த திரைப்படத்தில் ஒரு கட்டத்திற்கு மேல் ரசிகர்களிடத்தில் பயத்தை உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனி ஆளாக நின்று முழு திரைப்படத்தையும் ஆக்கிரமித்து இருக்கிறார்.
அவருக்கு ஜோடியாக கார்த்திகா பாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகி அபர்ணதி சில காட்சிகள் மட்டுமே வருகிறார். பாடல் காட்சிகளுக்காகவும், காதல் காட்சிகளுக்காகவும் அபர்ணதியை பயன்படுத்தி இருக்கிறார்கள். கதாநாயகன் சச்சினுக்கு நண்பராக வரும் கும்கி அஸ்வின் கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக செய்து இருக்கிறார்.
மற்றும் ஸ்ருதி பெரியசாமி ,கே பி ஒய் பிரபாகரன் , ரவீணா தாஹா ,நவ்யா சுஜி , தரணி ,அபிஷேக் என நடித்த நடிகர்கள் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஆர்.எஸ்.ஆனந்த குமாரின் ஒளிப்பதிவு இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர் ரோனி ரபேல். இசை மற்றும் பின்னணி இசை அனைத்தும் திரைப்படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது
திரைப்படம் தொடக்கத்திலிருந்து இது ஒரு பேய்ப் திரைப்படம் என காட்சிகள் வந்தாலும்.ஆனால் போகப் போக உளவியல் சார்ந்த மனப் பாதிப்பு கொண்ட ஒரு கதாபாத்திரத்தையும் ஆவி சம்பந்தப்பட்ட கற்பனையையும் ஒன்றிணைத்துள்ளார் இயக்குனர் ரமேஷ் பழனிவேல்.ஆவி மற்றும் அமானுஷ்ய சக்திகள் என திகில் கதையை மையமாக வைத்து திரைப்படத்தை இயக்கி இருந்தாலும் பேய் மற்றும் அமானுஷ்ய சம்பவங்கள் ஒரு மனிதனை நேரடியாக பாதிக்காமல், மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்த கூடியது என்பதை சொல்ல முயற்சித்திருக்கிறார். இயக்குனர் ரமேஷ் பழனிவேல்.
மொத்தத்தில், ‘டீமன்’ படம் பேய் ரசிகர்களுக்கு விருந்து.
திரைநீதி செல்வம்.