Take a fresh look at your lifestyle.

ராணா டகுபதி பெருமையுடன் வழங்கும், தருண் பாஸ்கர் தாஸ்யம், விஜி சைன்மாவின் கீதா கோலா திரைப்படம் நவம்பர் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

57

CHENNAI:

திரையுலகில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகியுள்ள மிகச்சிறந்த படைப்புகளை, தானாக முன்வந்து ஆதரித்து, அப்படங்களை பெரிய அளவில் மக்களிடம் சேர்த்து வருகிறார் முன்னணி நட்சத்திர நடிகர் ராணா டகுபதி. அவர் அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கப்படும் கீதா கோலா படத்தை வழங்கவுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படம் நவம்பர் 3ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது, ஆம் தீபாவளிக்கு 9 நாட்களுக்கு முன்னதாகவே கீதா கோலா திரையரங்குகளுக்கு வரவுள்ளது.

இப்படத்தில் மொத்தம் 8 முக்கிய கதாப்பாத்திரங்கள்  உள்ளது. நகைச்சுவை பிரம்மா பிரம்மானந்தம் மிக வேடிக்கையானதொரு கேரக்டரில் நடித்துள்ளார், அதேசமயம் தருண் பாஸ்கர் உள்ளூர் டான் ஆக தோன்றுகிறார். சைதன்யா ராவ் மடாடி, ரகு ராம், ரவீந்திர விஜய், ஜீவன் குமார், விஷ்ணு, ராக் மயூர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

K.விவேக் சுதன்ஷு, சாய்கிருஷ்ணா கட்வால், ஸ்ரீனிவாஸ் கௌசிக் நந்தூரி, ஸ்ரீபாத் நந்திராஜ் மற்றும் உபேந்திர வர்மா ஆகியோர் இணைந்து  தயாரித்துள்ள  கீதா கோலா திரைப்படம்  விஜி சைன்மா நிறுவனத்தின் முதல் முழு நீளத் தயாரிப்பு ஆகும். இப்படத்திற்கு AJ ஆரோன் ஒளிப்பதிவு செய்ய, விவேக் சாகர் இசையமைக்கிறார். உபேந்திர வர்மா படத்தொகுப்பாளராகவும், ஆஷிஷ் தேஜா புலாலா கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். தருண் பாஸ்கர் வசனம் எழுதியுள்ளார்.

நடிகர்கள்:

பிரம்மானந்தம், ரகுராம், ரவீந்திர விஜய், ஜீவன் குமார், விஷ்ணு, தருண் பாஸ்கர், சைதன்யா ராவ் மடாடி, ராக் மயூர் மற்றும் பலர்

எழுத்து இயக்கம் – தருண் பாஸ்கர் தாஸ்யம்.

தயாரிப்பு நிறுவனம் – விஜி சைன்மா
ரைட்டர் ரூம்  – குயிக் பாக்ஸ்
தயாரிப்பு – கே. விவேக் சுதன்சு, சாய்கிருஷ்ணா கட்வால், ஸ்ரீனிவாஸ் கௌஷிக், ஸ்ரீபாத் நந்திராஜ் & உபேந்திர வர்மா
வழங்குபவர் – ராணா டகுபதி
இசை – விவேக் சாகர்
ஒளிப்பதிவு – AJ ஆரோன் எடிட்டர்: உபேந்திர வர்மா கலை இயக்குனர் – ஆஷிஷ் தேஜா புலாலா ஆடைகள் – பூஜிதா தாடிகொண்டா மக்கள் தொடர்பு – யுவராஜ்

Rana Daggubati Proudly Presents, Tharun Bhascker Dhaassyam, VG Sainma’s Keedaa Cola Theatrical Release On November 3rd

Handsome hunk Rana Daggubati who backed several small to medium-range movies comes on board as a presenter for one of the most awaited crazy projects- Keedaa Cola directed by Tharun Bhascker Dhaassyam. The movie which is already making enough noise, particularly after the release of its teaser, is set to enthrall in cinemas from November 3rd. Yes, Keedaa Cola will be arriving in cinemas nearly 9 days before Diwali.

The movie will have a total of 8 prime characters. Comedy Brahma Brahmanandam played an amusing character, whereas Tharun Bhascker will be seen as a local don. Chaitanya Rao Madadi, Raghu Ram, Ravindra Vijay, Jeevan Kumar, Vishnu, and Rag Mayur are the other important cast in the movie.

Keedaa Cola produced by K.Vivek Sudhanshu, Saikrishna Gadwal, Srinivas Kaushik Nanduri, Sripad Nandiraj, and Upendra Varma is the maiden feature-length production of VG Sainma.

AJ Aaron is the cinematographer and Vivek Sagar is the music director of the movie. Upendra Varma is the editor and Ashish Teja Pulala is the art director. Tharun Bhascker penned the script.

Cast: Brahamanandam, Raghu Ram, Ravindra Vijay, Jeevan Kumar, Vishnu, Tharun Bhascker, Chaitanya Rao Madadi, Rag Mayur and others

Written & Directed by Tharun Bhascker Dhaassyam
Production House – VG Sainma
Writer’s Room – Quick Fox
Produced by K. Vivek Sudhanshu, Saikrishna Gadwal, Srinivas Kaushik, Sripad Nandiraj & Upendra Varma.
Presents: Rana Daggubati
Music: Vivek Sagar
Cinematography: AJ Aaron
Editor: Upendra Varma
Art Director: Ashish Teja Pulala
Costumes: Poojitha Tadikonda
PRO: Yuvraaj