Take a fresh look at your lifestyle.

நந்தமுரி கல்யாண் ராமின் பீரியடிக் ஸ்பை த்ரில்லர் படமான ‘டெவில்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சித் ஸ்ரீராம் பாடிய “மாயே சேஸி” பாடல் செப்டம்பர் 19ஆம் தேதி வெளியாகிறது!

59

CHENNAI:

நடிகர் நந்தமுரி கல்யாண் ராம்  தனித்துவமான திரைக்கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளார். தற்போது அவர் மற்றுமொரு  சுவாரஸ்யமான திரைக்கதையுடன்  ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார். கதாநாயகனின் மூர்க்கத்தனத்தைக் குறிக்கும் வகையில் இப்படத்திற்கு டெவில் எனப் பெயரிடப்பட்டுள்ளது.  மேலும்  இது பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் என்ற டேக்லைனுடன்  வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான  இப்படத்தின் டீஸர் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் நவம்பர் 24, 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது. டெவில் – தி பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  “மாயே செஸி”  ஃபர்ஸ்ட் சிங்கிள் செப்டம்பர் 19 அன்று வெளியிடப்படவுள்ளது. பாடல்கள்  ICON MUSIC ல் கிடைக்கும்.

டெவில் படத்தின்  அற்புத இசை கேட்போரை மயக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது, மேலும் முதல் சிங்கிளான “மாயே செஸி”  வெறும் ஆரம்பம்தான். அபிஷேக் நாமா தயாரித்து இயக்கியுள்ள டெவில், பார்வையாளர்களை மறக்க முடியாத இசைப் பயணத்திற்கு அழைத்துச் செல்லவுள்ளது. பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் இந்த பாடலுக்கு தனது ஆத்மார்த்தமான குரலை வழங்கியுள்ளார், அதே நேரத்தில் சத்யா.ஆர்.வி எழுதிய வரிகள் கேட்போரின் இதயங்களைத் தொடும் வகையில் அமைந்துள்ளது. ஹர்ஷவர்தா ராமேஷ்வர் உடைய இசை பாடலுக்கு கூடுதல் மயக்கத்தை தருகிறது, இந்தப்பாடல்  ஆழ்ந்த மற்றும் உணர்ச்சிகரமான புது அனுபவத்தை தருகிறது.

இத்திரைப்படத்தில் கல்யாண் ராம் மற்றும் சம்யுக்தா ஜோடியின் சிறப்பான நடிப்பு கண்டிப்பாக பெரிதாக பேசப்படும், மேலும் இவர்களின்  கெமிஸ்ட்ரியும், வசீகரிக்கும் கதையும் பார்வையாளர்களிடம் பெரும் தாக்கத்தை உருவாக்கும். வெற்றிபெற்ற பல திரைப்படங்களை வழங்கிய  அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனம் “டெவில்” படத்தை  வழங்குகிறது. தயாரிப்பு வடிவமைப்பாளரான காந்தி நதிக்குடிகர் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான காட்சி அனுபவத்தை உருவாக்க விடாமுயற்சியுடன் பணியாற்றி வருகிறார். சௌந்தர் ராஜன்.எஸ் ஒளிப்பதிவும், தம்மிராஜின் படத்தொகுப்பும் வெள்ளித்திரையில் கதைக்கு உயிர் கொடுக்கும்.

ஸ்ரீகாந்த் விசாவின் திறமையான குழுவினர் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை அழகாக வடிவமைத்துள்ளனர்.  பரபரப்பான திருப்பங்களுடன், அனைவரையும்  ஈர்த்து,  ஒரு நல்ல அனுபவத்தை, இந்தப்படம்  வழங்கும். “மாயே சேஸி” இன் வெளியீடு கேட்போரின் இதயங்களைக் கவரும்,  ஒரு அற்புதமான இசை பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது.  இந்த ஸ்பை த்ரில்லர் படம் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும்.

அபிஷேக் பிக்சர்ஸ் இப்படத்தை வழங்குகிறார்கள்

நடிகர்கள்: நந்தமுரி கல்யாண் ராம், சம்யுக்தா மற்றும் பலர்

பேனர்: அபிஷேக் பிக்சர்ஸ்
வழங்குபவர்: தேவன்ஷ் நாமா
தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்: அபிஷேக் நாமா
கதை, திரைக்கதை, வசனம்: ஸ்ரீகாந்த் விசா
ஒளிப்பதிவு: சௌந்தர் ராஜன்.எஸ்
இசை: ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: காந்தி நதிக்குடிகர்
எடிட்டர்: தம்மிராஜு
தலைமை நிர்வாக அதிகாரி: பொதினி வாசு
கதை உதவி : பிரசாந்த் பரடி
இணை இயக்குநர்: சலசனி ராமராவ்
ஆடை வடிவமைப்பாளர்: விஜய் ரத்தினம் MPSE
ரீ ரெக்கார்டிங் மிக்ஸ் : ஏ எம் ரஹ்மத்துல்லா ஏ. எம். ரஹ்மத்துல்லா
சண்டைக்காட்சி: வெங்கட் மாஸ்டர்
போஸ்டர் வடிவமைப்பு: கன்னி ஸ்டுடியோஸ்
டிஜிட்டல் மார்க்கெட்டிங்: வால்ஸ் & டிரெண்ட்ஸ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
ஆடை வடிவமைப்பு: அஸ்வின் ராஜேஷ்

Nandamuri Kalyan Ram’s periodical spy thriller ‘Devil’, first single MAAYE CHESEY sung by Sid Sriram releasing on September 19th

Nandamuri Kalyanram is known for his knack in selecting unique scripts right from the beginning of his career is bringing another interesting film. The film titled stirringly as Devil which denotes the ferocity of the protagonist. And it comes with the tagline- The British Secret Agent.

The film’s teaser was released recently and it made us all to anticipate more from the film. The film will be released in theatres on November 24, 2023. The much-awaited single “MAAYE CHESEY” from the movie Devil – The British Secret Agent will be released on September 19th. The music on ICON MUSIC.

The mesmerising music of Devil is set to enchant the listeners, and the first single “MAAYE CHESEY” is just the beginning. Produced & directed by Abhishek Nama, Devil promises to take the audience on an unforgettable musical journey. Renowned singer Sid Sriram lends his soulful voice to the song, while the lyrics penned by Satya.R.V are sure to touch the hearts of the listeners. The enchanting music composed by Harshavardha Rameshwar adds an extra layer of magic to the song, promising an immersive and emotional experience.

The movie stars Kalyan Ram and Samyutha, who are expected to deliver brilliant performances. The chemistry between the lead actors and the captivating narrative are set to create an impact on the audience. Abhishek Pictures, known for their remarkable productions, presents Devil. The production designer Gandhi Nadikudikar has diligently worked to create a visually stunning experience for the viewers. Cinematography by Soundar Rajan.S and editing by Tammiraju are expected to bring the story to life on the silver screen.

The talented team of Srikanth Vissa has beautifully crafted the story, screenplay, and dialogues, ensuring a gripping and engaging narrative for the audience. The release of “MAAYE CHESEY” marks the beginning of an exciting musical journey that will captivate the hearts of the listeners. More details regarding this said-to-be period spy thriller will be out soon.

A film by Abhishek pictures

Cast: Nandamuri Kalyan Ram, Samyuktha and others

Banner: Abhishek Pictures
Presented by: Devansh Nama
A Film By Abhishek  Pictures
Producer & Director : Abhishek Nama
Story, Screenplay, Dialogues: Srikanth Vissa
Cinematography: Soundar Rajan.S
Music: Harshavardhan Rameshwar
Production Designer: Gandhi Nadikudikar
Editor: Tammiraju
Ceo : Potini vasu
Story Development : Prashanth  baradi
Co Director : chalasani ramarao
Costume Designer :Vijay Rathinam MPSE
Re-Recording Mix : A M RahmathullaA. M. Rahmathulla
Stunts : Venkat Master
Poster designs : Kanni Studios
Digital Marketing:  Walls & Trends
Pro : Yuvraaj
Costumes design: Aswin Rajesh