Take a fresh look at your lifestyle.

வசூலில் புதிய சாதனையைப் படைத்து வரும் ஷாருக்கானின் ‘ஜவான்’

61

CHENNAI:

ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கத்தில் கிங்கான் ஷாருக்கான் நடிப்பில்  “ஜவான்”  திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான இப்படம், வசூலில் புதிய சாதனைகள் படைத்து வருகிறது. இந்த திரைப்படம் வெளியான நான்கு தினத்திற்குள் ஐநூற்றியிருபது கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து புதிய வரலாற்று சாதனையைப் படைத்து வருகிறது.

‘ஜவான்’ படம் வெளியாகி மூன்றாவது நாளான கடந்த சனிக்கிழமை, செப்டம்பர் 9 ஆம் தேதி, இந்திய திரையுலக வரலாற்றில் வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஒரே நாளில் இந்திப் பதிப்பு 68.72 கோடி ரூபாயையும், உலகளவில் 144.22 கோடி ரூபாயையும் வசூலித்துள்ளது. எந்த ஒரு இந்திய திரைப்படமும் இதற்கு முன்பு இத்தகைய வசூல் சாதனையை நிகழ்த்தியதில்லை என்பது குறிப்பிடதக்கது.

“ஜவான்” திரைப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. தென்னிந்திய சினிமாவில் ப்ளாக்பஸ்டர்களை வழங்கிய இயக்குநர் அட்லீ இத்திரைப்படத்தில் கிங்கான் ஷாருக்கானை இதுவரை  ரசிகர்கள் கண்டிராத தோற்றத்தில் மாஸாக காட்சிப்படுத்தியுள்ளார். ஆக்சன், ரொமான்ஸ், காமெடி, இரண்டு விதமான கதாப்பாத்திரம், பலவிதமான லுக் என ஷாருக்கான் ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

தென்னிந்திய திரைத்துறையிலிருந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பங்குபெற்றதோடு, தென்னிந்தியாவின் முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்றிருப்பதால், தென்னிந்தியாவிலும் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இசையமைப்பாளர் அனிருத்தின் இசை படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது. உலகம் முழுக்க ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஜவான் திரைப்படம் வசூலில் இன்னும் மிகப்பெரிய சாதனைகள் படைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.