சென்னை:
டைம் டிராவல், டைம் லூப், பேர்லல் யூனிவர்ஸ் போன்ற சயின்ஸ் ஃபிக்ஷன் போன்ற ஹாலிவுட் ஸ்டைல் கதைகளைப் பார்த்து தமிழ் சினிமாவுக்காக ஒரு காதல் கதையை எழுதி, இயக்குனர் விக்னேஷ்கார்த்திக் இயக்கி நிரூபித்து காட்டி இருக்கும் படம் தான் “அடியே”. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், கௌரி G கிஷன், வெங்கட் பிரபு, ஆர்.ஜே. விஜய், ஜி.கே மதும்கேஷ், சுவேதா வேணுகோபால், மற்றும் பலர் நடித்திருக்கிறனர். இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,
கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ் பள்ளி பருவத்தில் ஒரு விபத்தில் தன் தாய் தந்தையை இழந்து, நண்பர்களின் உதவியால் வாழ்ந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் வாழ பிடிக்காமல் வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறார். இந்த சமயத்தில் ஜிவி பிரகாஷ் படித்த தனது பள்ளி பருவ காதலி கதாநாயகி கெளரி கிஷனை தொலைக்காட்சியில் பேட்டி எடுக்கிறார்கள். பள்ளி பருவத்தில் நடந்த ஒரு முக்கியமான மகிழ்ச்சியான நிகழ்வை விவரமாக சொல்லும்போது, அவர் சொன்ன விஷயத்தைப் பார்த்த கதாநாயகன் ஜிவி பிரகாஷ் மீண்டும் வாழ வேண்டும் என்ற ஆசையில் கதாநாயகி கெளரி கிஷனை சந்திக்க முயற்சிக்கிறார்.
ஆனால், கதாநாயகி கெளரி கிஷனுக்கு கதாநாயகன் ஜிவி பிரகாஷ் யார் என்று தெரியாது என்கிற நிலையில், தனது காதலை எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்று முயற்சி செய்யும் போது கார் விபத்தில் சிக்கி கோமாவில் சிக்கிக் கொள்கிறார். கண் விழித்து பார்க்கும் போது வேறு ஒரு உலகத்தில் நடமாடுவது போன்ற ஒரு உணர்வு அவருக்கு ஏற்படுகிறது. அப்போது கதாநாயகன் ஜிவி. பிரகாஷ் அந்த உலகத்தில் தன் காதலி கதாநாயகி கௌரி கிஷனின் மனைவியாக இருக்கிறார். உண்மையிலேயே கௌரி கிஷன் தன் மனைவிதானா? அல்லது கனவா? என்று ஜிவி பிரகாஷ் யோசிக்கிறார்.
இறுதியில் கதாநாயகி கௌரி கிஷன் தனக்கு எப்படி மனைவியாக மாறினார்? கதாநாயகன் ஜிவி. பிரகாஷுக்கு விபத்து நடந்தபோது என்ன ஆனது? ஜி.வி. பிரகாஷ் மறுபடியும் பழைய உலகத்திற்கு மீண்டு வந்தாரா? என்பதுதான் இந்த “அடியே” திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ஜி வி பிரகாஷ் நடித்திருக்கிறார்.பள்ளி படிக்கும் மாணவனாகவும், இளைஞராகவும் நடிப்பில் மட்டுமல்லாமல் உடல் மொழியில் வித்தியாசம் காண்பித்து நடிப்பில் அசத்தி இருக்கிறார். மீசை தாடியுடன் அதிக தலை முடி, என வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று தனது நடிப்பில் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக கௌரி கிஷன் நடித்துள்ளார்.அழகாக வந்து சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்கிறார். கதையை சரியாக புரிந்து கொண்டு இவர் தனது முக பாவங்களை மாற்றி நடித்திருப்பதோடு அற்புதமாக அனைவரின் மனதையும் நெருட வைக்கிறார். இந்தப் படத்தில் கௌரி கிஷனை ஜீவி பிரகாஷ் மட்டுமல்ல படம் பார்க்கும் எல்லோருமே அவரை காதலிக்கின்ற அளவுக்கு உணர்வுகளை ஏற்படுத்துகிறார். அப்படி ஒரு நடிப்பு திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஜிவி பிரகாஷின் நண்பர்களாக வரும் ஆர் ஜே விஜய் கலாய்ப்பதில் தியேட்டரில் உள்ள ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். முதல் உலகத்தில் வாசிம் அக்ரமாகவும், இரண்டாம் உலகத்தில் வக்கார் யூனுஸாகவும் அவர் வருவது சிரிக்க வைக்கிறது.
இயக்குனர் வெங்கட் பிரபு வரும் காட்சிகள் அனைத்திலும் சிறப்பு செய்து இருக்கிறார். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் மேனரிசத்தை கொண்டு வருவதற்கு இயக்குனர் வெங்கட் பிரபு முயற்சி செய்து இருக்கிறார். ஆனாலும் அவரது நடிப்பு அனைவரையும் சிரிக்க வைக்கிறது. இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் பின்னணி இசை அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது. ஒளிப்பதிவாளர் கோகுல் பினாயின் ஒளிப்பதிவு நமது கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறார்.
டைம் டிராவல் கதையை மையமாக வைத்து அடியே திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். இப்படி ஒரு கதையை தேர்வு செய்தால் திரைப்படத்திற்க்கு திரைக்கதை மிக மிக முக்கியம் என்பதை புரிந்துக் கொண்டு தெளிவான கதையை மாறுபட்ட முறையில் இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய் கார்த்திக்.
மொத்தத்தில் “அடியே’ படம் இளைஞர்களுக்கு விருந்து.
திரைநீதி செல்வம்.