உஸ்தாத் ராம் பொதினேனி, ஸ்ரீலீலா நடிப்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீனின் ‘ஸ்கந்தா’படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!
CHENNAI:
‘அகாண்டா’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் போயபதி ஸ்ரீனு, உஸ்தாத் ராம் பொதினேனியுடன் இணைந்துள்ள ஒரு மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னர் திரைப்படம்தான் ‘ஸ்கந்தா’. இதுவரை பார்த்திராத மாஸ் கெட்-அப்களில் தனது ஹீரோக்களை திரையில் கொண்டு வருவதில் பெயர் பெற்ற இயக்குநர் போயபதி, இந்தப் படத்திலும் ராமை முற்றிலும் மாறுபட்ட மாஸ் அவதராத்தில் காட்ட இருக்கிறார். இதுவரை வெளியான அனைத்து போஸ்டர்கள் மற்றும் புரோமோஷனல் வீடியோக்களில் ராம் மாஸாகவே இருக்கிறார்.
படத்தின் முன்னணி நடிகர்களுடனும், நடனக் கலைஞர்களுடனும் படத்தின் கடைசி பாடலோடு ‘ஸ்கந்தா’ படத்தின் மொத்த படப்பிடிப்பையும் படக்குழு முடித்துள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகிறது. இது பான் இந்தியா படம் என்பதால், நாடு முழுவதும் உள்ள மற்ற மொழிகளில் படத்தை ரசிகர்களிடம் கொண்டு செல்வதற்கான புரோமோஷன் பணிகளையும் படக்குழு தீவிரப்படுத்தியுள்ளது.
டீசர் மற்றும் டைட்டில் க்ளிம்ப்ஸ் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் ‘நீ சுட்டு சுட்டு’ பாடலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. எஸ் தமன் இசையமைத்த இந்தப் பாடல் அனைத்து இசை தளங்களிலும் முதலிடத்தில் உள்ளது. ராம் மற்றும் ஸ்ரீலீலா இந்தப் பாடலில் தங்களது அசத்தலான நடனத்தின் மூலம் பாடலை இன்னும் சிறப்பாக்கியுள்ளனர்.
இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகமாக உள்ள நிலையில் மேலும் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க தயாரிப்பாளர்கள் புரோமோஷன் பணிகளைத் தீவிரமாக்கியுள்ளனர். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் அதிக தயாரிப்பு மதிப்புகள் மற்றும் உயர்தர தொழில்நுட்ப தரங்களுடன் ஒரு பெரிய பட்ஜெட்டில் ஸ்ரீனிவாசா சித்தூரி பெருமையுடன் தயாரித்த படத்திற்கு சந்தோஷ் டிடேக் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தினை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் பவன் குமார் வழங்குகிறார்கள். படத்தொகுப்பை தம்மிராஜு கையாண்டுள்ளார்.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் ‘ஸ்கந்தா’ வெளியாக உள்ளது.
தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்: போயபதி ஸ்ரீனு,
தயாரிப்பாளர்: ஸ்ரீனிவாசா சித்தூரி,
பேனர்: ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்,
வழங்குபவர்கள்: ஜீ ஸ்டுடியோஸ் சவுத், பவன் குமார்,
இசை: எஸ்எஸ் தமன்
ஒளிப்பதிவு: சந்தோஷ் டிடேக்,
எடிட்டிங்: தம்மிராஜு.