விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர், பரசுராம் நடிக்கும் VD13 / SVC 54 படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது!
CHENNAI:
விஜய் தேவரகொண்டா மற்றும் பரசுராம் இணையும் படம் குறித்தான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ். மேலும், வாசு வர்மா இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக உள்ளார். ’கீத கோவிந்தம்’, ’சர்க்காரு வாரிபட்டா’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்குப் பிறகு விஜய் மற்றும் பரசுராம் மீண்டும் இணைந்திருக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்துள்ளது. இவர்கள் இணைந்திருக்கும் இரண்டாவது படம் இன்று ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது.
தயாரிப்பாளர் ஷியாம் பிரசாத் ரெட்டி கிளாப் அடிக்க, கோவர்தன் ராவ் தேவரகொண்டா முதல் காட்சியை இயக்க, பிரபல பைனான்சியர் சத்தி ரங்கய்யா கேமராவில் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது ப்ரீ புரொடக்ஷன் நிலையில் உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ’சீதாராமம்’ படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகமாகி தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்த மிருணாள் தாக்கூர் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
தயாரிப்பாளர்களான தில் ராஜு மற்றும் சிரிஷுடன் இந்த படத்தின் மூலம் முதன் முறையாக விஜய் தேவரகொண்டா கைகோர்த்துள்ளார். இது ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸின் 54வது தயாரிப்பு ஆகும். மேலும், மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இந்த #VD13 திரைப்படம் உருவாக இருக்கிறது. மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
தொழில்நுட்பக் குழு விவரம்:
நடிகர்கள்: விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர்
ஒளிப்பதிவு: கே.யு.மோகனன்,
இசை: கோபிசுந்தர்,
கலை இயக்குநர்: ஏ.எஸ்.பிரகாஷ்,
எடிட்டர்: மார்த்தாண்டன் கே வெங்கடேஷ்,
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: வாசு வர்மா,
தயாரிப்பாளர்கள்: ராஜு – சிரிஷ்,
எழுத்து-இயக்கம்: பரசுராம் பெட்லா,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்