Take a fresh look at your lifestyle.

ஏப்ரல் 21 அன்று தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் சக்திவேலனின் சக்தி ஃபிலிம் பேக்டரி வெளியிடும் திரைப்படம் ‘யாத்திசை

107

சென்னை:

*’யாத்திசை’ டிரெய்லர் வெறும் 6 நாட்களில் 6 மில்லியன் பார்வைகளை கடந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், திரைப்படத்தை ஏப்ரல் 21 அன்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் சக்திவேலனின் சக்தி ஃபிலிம் பேக்டரி வெளியிடுகிறது*

வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் வழங்கும் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘யாத்திசை’. ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராக போராடிய ஒரு சிறு தொல்குடியை பற்றிய கதைதான் ‘யாத்திசை’. வெறும் 6 நாட்களில் 6 மில்லியன் பார்வைகளை கடந்து டிரெய்லர் மூலம் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த இப்படம் ஏப்ரல் 21 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘யாத்திசை’ தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை சக்திவேலனின் சக்தி ஃபிலிம் பேக்டரியும், வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை ஐங்கரன் இன்டர்நேஷனலும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று இனிதே நடைபெற்றது.

*இசையமைப்பாளர் சக்ரவர்த்தி பேசியதாவது…*

முதலில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி. இது பீரியட் படம் என்பதால் இசையமைப்பது பெரும் சவாலாக இருந்தது.

*நடிகை சுபத்ரா பேசியதாவது…*

டிரெய்லருக்கு கிடைத்த ஆதரவுக்கு நன்றி. படத்திற்கும் அதே ஆதரவு தாருங்கள். படம் மிக நன்றாக வந்துள்ளது, படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள், நன்றி.

*தயாரிப்பாளர் கே ஜே கணேஷ் பேசியதாவது…*

எங்கள் குழுவை நம்பி மட்டுமே இந்தப்படத்தை எடுத்துள்ளோம். படத்தின் டிரெயல்ருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள், நன்றி.

*இயக்குநர் தரணி ராசேந்திரன் பேசியதாவது…*

தயாரிப்பாளரிடம் கதை சொன்ன போது உன்னிடம் உள்ள தவிப்பு பிடித்துள்ளது. உன் டீம் பற்றி சொல் என்றார். இந்தப்படத்தின் உயிர் என்னுடைய டீம் தான். எடிட்டர் மகேந்திரன், இசையமைப்பாளர் சக்ரவர்த்தி இருவரும் இல்லையென்றால் நான் இல்லை. எங்களை நம்பி ஒவ்வொருவராக உள்ளே வந்தார்கள். ஒரு ஷெட்யூல் முடித்து காட்ட சொன்னார்கள், அதன் பிறகே இந்தப்படம் உருவாவது உறுதியானது. 1300 வருடங்களுக்கு முந்தைய கதை என்பதால், அந்த காலகட்டம் அந்த மொழி வழக்கு அதையெல்லாம் உயிரோடு கொண்டு வருவது அத்தனை சவாலாக இருந்தது. அக்காலத்திய மொழியை எடுத்தால் இப்போது யாருக்கும் புரியாது என எல்லோரும் பயமுறுத்தினாலும் இதில் ஒரு கலை இருக்கிறது. சினிமா என்பது கலை, மக்கள் கொண்டாடுவார்கள் என்று தயாரிப்பாளர் தான் உறுதியாக நின்றார். அவருக்கு நன்றி. இப்படத்திற்கு முழு உயிர் தந்தது என் குழு தான். 25 உதவியாளர்கள் இப்படத்தில் வேலை செய்துள்ளார்கள். இந்தப்படத்தின் உயிர் எல்லோரையும் இழுத்து உடன் இணைந்து பயணிக்கிறது. இந்தப்படம் பொன்னியின் செல்வனுக்கு போட்டியல்ல ஆனால் யாத்திசை மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும். இந்திய சினிமாவில் மிகப்பெரிய படமாக இருக்கும் எனும் நம்பிக்கை உள்ளது. அனைவருக்கும் நன்றி.

*விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது…*

‘யாத்திசை’  சக்தி ஃபிலிம் பேக்டரிக்கான பெருமை. எங்கள் நிறுவனத்தில் நிறைய பெருமையான படைப்புகளை வெளியிட்டுள்ளோம் அந்த வகையில் இந்தப்படம் மிக முக்கியமானதாக இருக்கும். இந்தப்படத்தின் டிரெய்லர் பார்த்துவிட்டே 30 பேருக்கு மேல் என்னை அழைத்துப் பேசினார்கள். எல்லோரையும் இந்தப்படம் சென்றடைந்துள்ளது என்பதே பெருமை. டிரெய்லரை விட இந்தப்படத்தில் இன்னும் பிரமாண்டம் இருக்கும். ஹாலிவுட் போர் படங்களில் கூட இல்லாத ஒரு அட்டகாசமான திரைக்கதை இந்தப்படத்தில் இருக்குறது. கண்டிப்பாக இது மிக முக்கியமான படமாக இருக்கும்.

*நடிகர் விஜய் சேயோன் பேசியதாவது…*

யாத்திசையை கொண்டு சேர்க்க வேண்டியது உங்கள் கடமை. இது நம்முடைய பெருமைமிகு படைப்பு. எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படத்தில் ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். இப்படம் வெற்றிபெற ஆதரவு தாருங்கள், நன்றி.

இத்திரைப்படம் ஏப்ரல் 21 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

**’Yaathisai’ Movie Press Meet!!!*

*With ‘Yaathisai’ trailer getting massive response by crossing 6 million views in just 6 days, the film is gearing up to be released in theatres across Tamil Nadu by Sakthivelan B’s Sakthi Film Factory on April 21*

Producer KJ Ganesh of Venus Infotainment is bankrolling the film ‘Yaathisai’ directed by Dharani Rasendran, featuring newcomers in the lead roles. The film set in the backdrop of the 7th century revolves around the story of of a small group of villagers who fought against the Pandiyan king. The film has become the favourite of the public with its scintillating trailer which has crossed 6 million views in just 6 days.

The movie’s Tamil Nadu theatrical rights have been bagged by Sakthivelan B’s Sakthi Film Factory, while foreign theatrical rights have been acquired by Ayngaran International. With the film gearing up for the worldwide theatrical release on April 21, the cast and crew members interacted with the press and media fraternity sharing the experience of working in this film.

Director Dharani Rasendran said,

“When I narrated the script to the producer, he told me that he likes the passion in me. He immediately asked about my team. The entire team is my heart and soul. Editor Mahendran and Music Director Chakravarthy have been the strongest pillars without whom, the film would have not been possible. The producers asked us to complete the first schedule, and then only approved to proceed ahead with the other schedules. It was a big challenge to recreate the Tamil linguistics, and backdrops of a story that is set in the time period 1300 years ago. Since the linguistics of that time period wouldn’t be familiar to contemporary audiences, many scared us stating that there are chances that the film might not connect with them. However, the producer gave us confidence stating that cinema is an art, and the audience will celebrate it. I thank him for his great gesture and support. The team has been a great support in shaping up this project. 25 assistant directors have worked on this film. The film isn’t a competition to Ponniyin Selvan, but it will be a special movie in the Tamil film industry. Thank you!”

Sakthivelan B, Sakthi Film Factory said,

“Yaathisai is a pride to Sakthi Film Factory. We have released many promising films from our banner, and this film is going to be a prominent one. More than 30 members instantly called me after watching the film’s trailer. I am glad that the trailer has garnered tremendous reception from everyone. The film has lots of grandeur more than the trailer. The film has a riveting screenplay more than in Hollywood war-based films. I am confident that it will be a special movie for every audience.”

Actor Vijay Seyon said,

“It’s your duty to take Yaathisai movie forward and find it a greater reach among the audiences. This is our most esteemed and reputable creation. I thank both the producer and director for giving me this opportunity. Everyone in the team has strived and worked hard. I request you all to support and make this film successful.”