Earlier, the team had surprised us with the absolute news of completing the entire shoot in a span of time, where the movie was launched by end of October 2022 and shooting wrapped up by December end. And now they have started the dubbing works with a simple ritual Pooja ceremony yesterday (January 23, 2023).
Joe, a feel-good love story bankrolled by Dr. D. Arulanandhu of Vision Cinema House, traverses through the love life of a boy from 17 years to 27 years of age. The film has been shot extensively in many locations – Chennai, Rameswaram, Ramnad, Pollachi, Palakkad, and Dindugal. A noteworthy fact is that Joe is the only Tamil movie shot at Muthalamada Railway Station, many years after Kamal Haasan starrer Anbe Sivam.
While Siddhu Kumar of Bachelor fame is composing music, the other technicians are Rahul KG Vignesh (Cinematography), Varun KG (Editor), ABR (Art Director), Power Pandiyan (Stunt), LM Dhanasehar (Production Controller), Abu & Chals (Cinematography), Vaisagh Vignesh Ramakrishna (Lyrics), Sridevi Gopalakrishnan (Costume Designer), Veera Sankar (Executive Producer) and Suresh Chandra-Rekha D’One (PRO).
சென்னை:
நடிகர் ரியோ ராஜ் நடித்திருக்க கூடிய ‘ஜோ’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரியோராஜின் வியத்தகு தோற்ற மாற்றம் மற்றும் ஸ்கிரீன் ப்ரசன்ஸ், இயக்குநர் ஹரிஹரன் ராமின் திறமை, சித்து குமாரின் பின்னணி இசை, கண்ணைக் கவரும் விஷூவல் என இவை அனைத்தும் படத்தின் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்தப் படம் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவடைந்தது. குறுகிய காலத்திற்குள் படம் முடிவடைந்தது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நேற்று (ஜனவரி 23, 2023)-ல் எளிமையான பூஜையுடன் படக்குழு டப்பிங்கைத் தொடங்கியுள்ளது.
ஃபீல் குட் லவ் கதையாக உருவாகியுள்ள ‘ஜோ’ திரைப்படத்தை டாக்டர். D. அருளானந்தின் விஷன் சினிமா ஹவுஸ் தயாரித்து இருக்கிறது. 17 வயதில் இருந்து 27 வயது வரையிலான இளைஞன் ஒருவனின் காதல் கதையை இந்தப் படம் கூற இருக்கிறது. சென்னை, ராமேஸ்வரம், ராம்நாட், பொள்ளாச்சி, பாலக்காடு மற்றும் திண்டுக்கல் என வெவ்வேறு இடங்களில் இது படமாக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசனின் ‘அன்பே சிவம்’ படத்திற்கு அடுத்து தமிழ்ப்படமான ‘ஜோ’ மட்டும்தான் முதலாமட ரயில் நிலையத்தில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:
இசை: ‘பேச்சுலர்’ படப்புகழ் சித்து குமார்,
ஒளிப்பதிவு: ராகுல் KG விக்னேஷ்,
படத்தொகுப்பு: வருண் KG,
கலை இயக்குநர்: ABR,
சண்டைப் பயிற்சி: பவர் பாண்டியன்,
தயாரிப்பு கட்டுப்பாடு: LM தனசேகர்,
ஒளிப்பதிவு: அபு & சால்ஸ்,
வரிகள்: வைசாக், விக்னேஷ் ராமகிருஷ்ணா,
ஆடை வடிவமைப்பாளர்: ஸ்ரீதேவி கோபாலகிருஷ்ணன்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: வீரா சங்கர்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா D’One