சென்னை:
நட்மெக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நெட்ப்ளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியான நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘தி டீச்சர் ‘ எனும் திரைப்படம் இணையவாசிகளிடம் பாராட்டை பெற்று ட்ரெண்டிங்கில் முதலிடத்தினை பிடித்திருக்கிறது. இயக்குநர் விவேக் இயக்கத்தில் தயாராகி மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, நெட்ப்ளிக்ஸ் டிஜிட்டல் தளத்தில் டிசம்பர் 23ஆம் தேதியன்று ‘தி டீச்சர்’ வெளியானது.
நடிகர்கள் ஹக்கீம் ஷாஜகான், செம்பன் வினோத், கல்யாணி, மஞ்சு பிள்ளை, நந்து, மாலா பார்வதி, தினேஷ் பிரபாகர், கால்பந்தாட்ட வீரரும், நடிகருமான ஐ. எம். விஜயன், அனுமோல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் ‘தி டீச்சர்’ படத்தை நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிஷெட்டி, ப்ருத்வி ராஜ் மற்றும் VTK பிலிம்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் தேவிகா எனும் உடற்கல்வி ஆசிரியராக நடிகை அமலா பால் நடித்திருக்கிறார். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான இவர், தன்னை துன்புறுத்தியவர்களை தேடி கண்டறிந்து பழி வாங்குவதுதான் இப்படத்தின் திரைக்கதை. அமலா பாலின் அனுபவம் மிகுந்த முதிர்ச்சியான நடிப்பால் இப்படம் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. திரில்லர் ஜானரில் அமைந்திருப்பதால் இந்த படத்தின் திரைக்கதை, ரசிகர்களிடம் பேசு பொருளாகி இருக்கிறது.
இப்படத்தின் கதையை எழுதிய பி. ஜி. ஷாஜி குமார் மற்றும் இயக்குநர் விவேக், போதை பொருளை பயன்படுத்தி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட உடற்கல்வி ஆசிரியையான தேவிகா எனும் கதாபாத்திரம், தனக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொள்வது போல் திரைக்கதையை அமைத்திருப்பது ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
அமலா பாலின் ‘தி டீச்சர்’ திரைப்படம், டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் மட்டுமல்லாமல், திரையுலக ஆர்வலர்களிடத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.
Amala Paul’s recent sensational hit flick ‘The Teacher’ produced by Nutmeg Productions, premiered on Netflix and has garnered tremendous response among Netizens, thereby trending at No.1.
The Malayalam film ‘The Teacher’, directed by Vivek, was dubbed in Tamil and Telugu and had its OTT premiere on Netflix on December 23, 2022. Hakkim Shahjahan, Chemban Vinod, Kalyani, Manju Pillai, Nandhu, Mala Parvathi, Dinesh Prabhakar, Football player-actor I.M. Vijayan, Anumol, and many prominent actors have played pivotal roles in this movie. This film, a thriller by its genre, is bankrolled by Varun Tripuraneni, Abhishek Ramisetty, and G Pruthvi Raj of Nutmeg Productions and VTV Films.
Amala plays Devika, a physical training teacher in this movie, a victim of sexual harassment, who sets out to seek revenge on who harassed her. Amala Paul’s adroitness in performance has grabbed the attention and praises of audiences. Besides, the Thriller genre and riveting screenplay have become an additional attraction by engaging the audiences.
The film’s story, penned by P.V. Shaji Kumar & director Vivek, has the screenplay revolving around a physical training teacher in a school, who gets sexually harassed by the use of narcotic drugs, eventually sets out to seek revenge by taking the law into her hands and settling scores with the miscreants. The audiences are raving about the film for its engrossing screenplay.
Amala Paul’s The Teacher has won the appreciation of not just digital platform audiences alone but is appreciated by film buffs, thereby becoming the No.1 Trending film in India.