Take a fresh look at your lifestyle.

Drums Sivamani on board to compose music for “Quotation Gang”

82

CHENNAI:

Musical icon Drums Sivamani is on board to compose music for Sunny Leone, Priyamani, Jackie Shroff and Sarah starrer “Quotation Gang”, directed by Vivek K Kannan.

“Quotation Gang” has been one of the much-anticipated flicks, ever since its announcement in 2021. The film has managed to stay away from the limelight adding to the curiosity of the audience. This Pan-Indian movie made simultaneously in 5 different languages – Tamil, Telugu, Kannada, Malayalam, and Hindi has big names from the industry in titular roles including never seen before avatars. Bollywood’s reigning actor Jackie Shroff and Deiva Thirumagal & Ponniyin Selvan movie fame Sara play pivotal roles in this movie. The others in the star cast include Pradeep, Vishno Warrier,  Akshaya, Kiara, Sonal, Sathindar & Sherin. Now, the makers are excited to announce that musical legend Drums Sivamani is on board to compose music for this movie. The movie’s shooting was completed successfully in Mumbai and the post production is underway on full swing in Chennai and Mumbai.

Arun is handling cinematography for this film, which has editing by K. Venkataraman. Jayakumar Srinivasan is the art director, and Om Prakash is the stunt choreographer for this film. Apart from directing ‘Quotation Gang’, Vivek K Kannan is producing it along with Gayatri Suresh of Filminati Entertainment in association with G. Vivekananthan of Sri Guru Jothi Films. Quotation Gang, a crime-thriller based on real incidents is shot across Kashmir, Chennai, Hyderabad, and Mumbai. The official announcement about the film’s worldwide theatrical release date will be made soon.

விவேக் கே கண்ணன் இயக்கத்தில் சன்னி லியோன், ப்ரியாமணி, ஜாக்கி ஷெராப் மற்றும் சாரா நடிக்கும் ‘Quotation Gang’ படத்தில் மியூசிகல் ஐகான் ட்ரம்ஸ் சிவமணி இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

கடந்த 2021-ம் ‘Quotation Gang’ அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. பான் இந்திய திரைப்படமான இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பல முன்னணி கலைஞர்கள் இதுவரை பார்த்திடாத கதாபாத்திரங்களில் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஜாக்கி ஷெராப் மற்றும் ‘தெய்வத்திருமகள்’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த சாரா இவர்கள் இருவரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பிரதீப், விஷ்னோ வாரியர், அக்ஷயா, கியாரா, சோனால், சதீந்தர் & ஷெரின் ஆகியோர் படத்தில் நடிக்கும் பிற நட்சத்திரங்கள் ஆவர். இப்போது ட்ரம்ஸ் சிவமணி படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. படப்பிடிப்பு மும்பையில் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்பை மற்றும் சென்னையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:

ஒளிப்பதிவு: அருண்,
படத்தொகுப்பு: கே. வெங்கட்ராமன்,
கலை இயக்குநர்: ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன்,
சண்டைப் பயிற்சி: ஓம் பிரகாஷ்

படத்தை இயக்குவதோடு விவேக் கே கண்ணன், ஸ்ரீ குரு ஜோதி பிலிம்ஸின் ஜி. விவேகானந்தனுடன் இணைந்து ஃபிலிமினாட்டி என்டர்டெயின்மென்ட் சார்பில் காயத்ரி சுரேஷுடன் இணைந்து படத்தைத் தயாரித்தும் இருக்கிறார். க்ரைம் திரில்லர் திரைப்படமான ‘Quotation Gang’ உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு காஷ்மீர், சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.