Take a fresh look at your lifestyle.

DNA மெக்கானிக் கம்பெனி தயாரிப்பில் சாந்தகுமார் இயக்க, அர்ஜூன் தாஸ்- தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் புதிய படம்!

127

சென்னை:

‘மெளனகுரு’, ‘மகாமுனி’ ஆகிய படங்களால் தனது திறமையை நிரூபித்தவர் இயக்குநர் சாந்தகுமார். அவரது அறிமுகப் படமான ‘மெளன குரு’ விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், இந்தப் படம் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட போதும் அங்கும் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அவரது இரண்டாவது படைப்பான ‘மகாமுனி’, பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் 30 விருதுகளை வென்றது.

இப்போது இயக்குநர் சாந்தகுமார் தன்னுடைய மூன்றாவது படத்தை ‘டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி’ பேனரின் கீழ் இயக்க இருக்கிறார். கதையின் முன்னணி கதாபாத்திரத்தில் அர்ஜூன் தாஸ் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். சென்னையில் எளிய முறையிலான பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.

ஒரு குறிப்பிட்ட வகைக்குள் வராத புதிய ட்ரெண்டை தமிழ் சினிமாவில் உருவாக்கிய படங்கள் என்றால் அது சாந்தகுமாரின் முந்தைய படங்களான ‘மகாமுனி’ மற்றும் ‘மெளனகுரு’. இந்தப் படங்களில் த்ரில்லர், எமோஷன்ஸ், ரொமான்ஸ், ஆக்‌ஷன் மற்றும் புதிர் என அனைத்தும் இருக்கும். அதேபோல, இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் புதிய படமும் குறிப்பிட்ட ஒரு வகைக்குள் இருக்காது.

தன்னுடைய புத்திசாலித்தனமான படங்கள் தேர்வால் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நன் மதிப்பைப் பெற்று வருபவர் நடிகர் அர்ஜூன். ‘கைதி’, ‘மாஸ்டர்’ மற்றும் ‘அந்தகாரம்’  ஆகிய படங்களில் அவருடைய வித்தியாசமான கதாபாத்திரம் சினிமா பயணத்தில் அவரது வளர்ச்சிக்கு அடுத்தக் கட்டமாக அமைந்தது. அந்த வரிசையில் இந்தப் படத்திலும் தனித்துவமான கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். ரேஷ்மா வெங்கடேஷ், சுஜித் ஷங்கர், GM சுந்தர், S ரம்யா மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

தொழில்நுட்பக் குழு விவரம்:

எழுத்து, இயக்கம், தயாரிப்பு: சாந்தகுமார் (DNA மெக்கானிக் கம்பெனி),
ஒளிப்பதிவு: சிவா GRN,
கலை: சிவராஜ் சாமரன்,
சண்டைப் பயிற்சி: ஆக்‌ஷன் பிரகாஷ்,
எடிட்டர்: V.J. சபு ஜோசப்,
இசை: தமன்,
பாடல் வரிகள்: யுகபாரதி,
படங்கள்: M. ஆனந்தன்,
ஆடை வடிவமைப்பு: மீனு சித்ரா கனி,
ஆடை: P. செல்வம்,
ஒப்பனை: வினோத்,
இணை இயக்குநர்கள்: சிவ பிரகாஷ் & கிருஷ்ண மூர்த்தி,
புரொடக்‌ஷன் எக்ஸிகியூட்டிவ்: C சரவணன்,
தயாரிப்பு மேலாளர்: தேனி தமிழ்,
நிர்வாக தயாரிப்பாளர்: S. பிரேம்.