Take a fresh look at your lifestyle.

இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி-சல்மான்கான் இணைந்து நடிக்கும் ‘காட்பாதர்’ படம் விரைவில் தமிழில் வெளியீடு!

122

சென்னை:

ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் மற்றும் சிரஞ்சீவியின் கொனிடேலா புரடக்சன் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள காட்பாதர் திரைப்படம் கடந்த அக்-5ஆம் தேதி வெளியானது.  சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் மோகன்ராஜா இயக்கியுள்ளார். இந்தப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது 100 கோடி வசூல் என்கிற இலக்கை தாண்டி இன்னும் வரவேற்புடன் இந்தப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தப்படத்தில் சல்மான்கான், நயன்தாரா, சத்யதேவ், சமுத்திரக்கனி, ஷயாஜி ஷிண்டே, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆந்திரா தெலங்கானாவில் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து வரும் அக்டோபர் 14ம் தேதி தமிழகத்திலும் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியாக இருக்கிறது. அதுமட்டுமல்ல இந்தப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரு சில வாரங்களில் இதன் தமிழ் பதிப்பும் வெளியாக இருக்கிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிபர்’ திரைப்படத்தை தான் காட்பாதர் என்கிற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். அதேசமயம் இந்த படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக மிகவும் நேர்த்தியாக ரீமேக் செய்து மோகன்ராஜா இயக்கியிருந்தது இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. படத்தின் கதாநாயகியாக நடித்த நயன்தாரா மற்றும் நட்புக்காக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஆகியோரின் பங்களிப்பும் இந்த படத்தின் சிறப்பம்சமாக அமைந்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.

Mega Star Chiranjeevi’s ‘Godfather’ (Telugu version) all set to release in Tamilnadu on October 14

RB Choudary’s Super Good Films along with Chiranjeevi’s Konidela Production have jointly produced ‘Godfather’ that had a theatrical release on October 5. Directed by Mohan Raja, Megastar Chiranjeevi plays the titular role in this film.

‘Godfather’ has received a phenomenal response from the Telugu audience by running successfully in theatres and crossed a phenomenal 100 crore mark very recently.
The film has Salman Khan, Nayanthara, Sathyadev, Samudirakani, Shyaji Shinde and Tanya Ravichandran in pivotal roles.

After receiving a tremendous response from Andhra and Telengana, the Telugu Version of the film is all set to release in Tamil Nadu on October 14. The post production works for the Tamil version is gearing up and is expected to release in a few weeks. ‘Godfather’ is the official Telugu remake of the Mohanlal starrer Malayalam Blockbuster ‘Lucifer’. Meanwhile Mohan Raja had remade the film by adding elements that would satisfy the expectations of the Telugu audience, eventually resulting in a blockbuster hit. The star cast that has  Nayanthara and Bollywood actor ‘Salman Khan’ in important roles, has been an added advantage to the film.Thaman S has composed the music for this film. Nirav Shah has done the cinematography and K. Venkatesh has done the editing.