சென்னை:
மும்பை தாதாவான அரவிந்த்சாமியும் மற்றும் அவரது எதிரிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்த போது நினைவுகள் மறந்து விட்டதால் அவருடன் பழகி, அவரைபழைய நினைவுகளுக்கு கொண்டு வந்து, அவரிடம் உள்ள முப்பது கோடி மதிப்புள்ள தங்கப் புதையல் எங்கு இருக்கிறது என்பதை விவரமாக கேட்டு தங்களிடம் சொல்ல வேண்டும் என்றுஒரு மர்ம கும்பல் கட்டளையிடுகிறது. அவரும் அரவிந்த்சாமியுடன் நட்பாகப் பழகி பழைய நினைவுகளை திரும்ப வைக்க முயல்கிறார். அப்போது எந்த இடத்தில் துப்பாக்கி சண்டை நடந்ததோ அந்த இடத்திற்கு மும்பை தாதா அரவிந்த்சாமியை தனது காரில் அழைத்து செல்கிறார் குஞ்சாகோ போபன். அந்த இடத்தில் அரவிந்த்சாமிக்கு பழைய நினைவுகள் வருகிறதா என்று சில விஷயங்களை நினைவு கூறுகிறார். இச்சமயத்தில் மதுவை குடித்து விட்டு கடற்கரையில் அரவிந்த்சாமியிடம், நான் டேவிட் என்றால் கிச்சு யார்? ஆகிய பெயர்களைச் சொல்லி உளறுகிறார் குஞ்சாக கோபன். அப்போது அரவிந்த்சாமி குஞ்சாக கோபனிடம் நீ யார் என்று கேட்கிறார். அதன்பின் என்ன நடந்தது? என்பதுதான் ‘ரெண்டகம்’ படத்தின் மீதிக் கதை..
ஒரு சினிமா தியேட்டரில் பார்ப்கார்ன் வியாபாரியாக மிக அமைதியான முறையில், அழகான ஹீரோ என்ற இமேஜ் கொண்டு அறிமுகமாகும் அரவிந்த்சாமி, தன்னால் ஆக்ஷன் ஹீரோவாகவும் ஜொலிக்க முடியும் என்பதை படத்தின் பல காட்சிகளில் நிரூபித்திருக்கிறார். மும்பை தாதாவாக அரவிந்த்சாமி மிகவும் அழுத்தமான நடிப்பை சிறப்பான முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார். குஞ்சாக போபனை ஒரு ரவுடி கும்பல் அடிக்கும் போது அந்த இடத்தில் அரவிந்த்சாமி பயங்கரமாக மோதும் சண்டைக் காட்சியில் அவரது சிறப்பான ஆக்ஷன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பெரிய தாதாவான ஜாக்கிஷெராப்பிடம் சென்று அவரை கொலை செய்யும் காட்சி மிரள வைக்கிறது. குஞ்சாக போபன் ஒரு வித்தியாசமாக தன் உடல் தோற்றத்தை மாற்றி நடித்திருக்கிறார். கடைசி கட்ட காட்சியில் அவர் யார் என்பது தெரிந்ததும் நடிப்பில் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார்.
ஆடுகளம் நரேன், ஈஷா ரெப்போ இருவரின் கதாபாத்திரங்கள் இறுதி கட்ட காட்சியில் எதிர்பாராத விதமாக திருப்பத்தை ஏற்படுத்துகிறது.
கதை திரைக்கதையை எழுதியிருக்கிறார் எஸ்.சஞ்சீவ். இயக்குனர் டி.பி.பெளினி கேங்ஸ்டர் கதையை வித்தியாசமான முறையில் இயக்கியிருப்பதோடு, கதாப்பாத்திரங்கள் மூலமாக கதையை பதற்றமாகவும் விறுவிறுப்பாகவும் இயக்கியிருப்பதை பாராட்டலாம்.
கௌதம் ஷங்கரின் ஒளிப்பதிவு கதைக்கு வலு சேர்த்து இருக்கிறது. அருள்ராஜ் கென்னடியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்துள்ளது.
மொத்தத்தில் ‘ரெண்டகம்’ படம் ஆக்ஷன் படம்தான் என்றாலும் அனைத்து ரசிகர்களும் ரசிக்க கூடிய படம்.