சென்னை:
புதுமுக இயக்குனர் தினேஷ் தயாரித்து இயக்கும் திரைப்படம் ‘ஹாட்ஸ்பாட்’.இப்படத்திற்கு திரைக்கதை வசனத்தை ஆண்டனி எழுதுகிறார். 1970 இல் நடக்கும் இப்படத்தின் கதை கோவாவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சைக்கோ திரில்லர் வகை படமாகும்.
இப்படத்தில் புதுமுகங்களான சந்திப் கதாநாயகநாக நடிக்க கதாநாயகியாக லட்சுமி நடிக்க உள்ளார். இவர்களோடு முக்கிய கதாபாத்திரத்தில் தினேஷ் மரியா, ஆண்டர்சன் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 30 அன்று கோவாவில் தொடங்கி மும்பை, பாங்காக் போன்ற இடங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது.
மேலும் இப்படத்திற்கு இசை ஜான் பீட்டர், ஒலிப்பதிவு விவேக், சண்டை பயிற்சி அலெக்ஸ், நடனம் பிரசன்னா. இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் தயாராக உள்ளது என்று குறிப்பிடத்தக்கது.