ஒரு கிராமத்துக்கு வருகை தரும் சாமியார் நிவின்பாலி மீது சாமி சிலையை திருட முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். நிவின்பாலிக்கு எதிராக சிலர் சாட்சி சொல்ல, தனக்கு தானே வாதாடி எதிராளிகளின் சாட்சியங்களை உடைக்கிறார் நிவின்பாலி.
இன்னொரு பக்கம் ஒருநாள் இரவில் மன்னர் லாலுவுக்கு திடீரென தொடர்ந்து விக்கல் ஏற்பட,,,,, எத்தனை வைத்தியம் பார்த்தாலும் அது குணமாகாமல் போக,,,, ,,,, இந்நிலையில் மந்திரி ஆசிப் அலியை அழைத்து, வைத்தியமெல்லாம் இனி வேண்டாம், இந்த நாட்டிலேயே அழகான பெண் ஒருத்தியை அழைத்து வா.. அவளுடன் சில காலம் சந்தோஷமாக வாழவேண்டும் என உத்தரவிடுகிறார்.. அவரது உத்தரவின்படி அழகான இளம்பெண்ணை தேடி கிளம்புகிறார் மந்திரி ஆசிப் அலி.
இந்த நேரத்தில் தான் ராஜா லாலுவின் மீது கிராமத்து அழகான ஏழைப்பெண் கொடுத்துள்ள புகார் அதே நீதிமன்றத்துக்கு வர, ராஜாவும் நீதிமன்றத்தில் ஆஜராகிறார். ராஜாவுக்காக அழகான பெண்ணை தேடிப்போன மந்திரி ஆசிப் ஆலி, கிராமத்தை சேர்ந்த அழகிய பெண்ணான தான்வியை வலுக்காட்டாயமாக இழுத்து வந்து ராஜாவிடம் ஒப்படைக்கிறார். ராஜா தன்னை துன்புறுத்தியதாக தந்தை மூலமாக நீதிமன்றத்தில் புகார் அளிக்கிறார் அழகிய பெண்ணான தான்வி,.
நிவின்பாலியின் வழக்கு சற்று நேரம் தள்ளிவைக்கப்பட்டு ராஜாவின் வழக்கு விசாரிக்கப்படுகிறது,. ராஜா எதற்காக அழகான இளம்பெண்ணை அழைத்து வரச்சொன்னேன் என்கிற உண்மையை வெளிப்படுத்துகிறார்.
நீதிமன்றம் அவர் சொன்ன காரணத்தை கேட்டு, அவருக்கு உதவி செய்வதற்காக அந்த இளம்பெண்ணை சித்ரவதை செய்ய …. இதை காண பொறுக்காத சாமியார் நிவின்பாலி, இதற்கு தான் சுமூக தீர்வு காண்பதாக கூறுகிறார்.
அழகான இளம்பெண் மூலமாக ராஜாவின் பிரச்சனைக்கு அப்படி என்ன தீர்வு கிடைக்க போகிறது ..? என்ற கேள்விக்கு விடை சொல்லும் படம்தான் ‘மஹாவீர்யர்’
சாமியாராக நடிகர் நிவின்பாலி, ராஜாவாக நடிகர் லால் விக்கல் பிரச்சனையில் சிரமப்படும்போதும் ஆணவம் கொண்ட ராஜாவாக நடிப்பில் ஜொலிக்கிறார் மந்திரியாக ஆசிப் அலி, . நாயகியாக நடிக்கும் அப்பாவி பெண்ணாக அழகில் அசத்தும் ஷான்வி ஸ்ரீவாத்சவ், நீதிமன்றத்தின் இறுதி காட்சிகளில், குறிப்பாக சில நிமிடங்கள் வரை அரை நிர்வாணமாக,,,,,, நடிப்பில் அசத்தல் .
நீதிபதியாக சித்திக், வக்கீலாக லாலு அலெக்ஸ், நீதிமன்றத்தில் வேறொரு வழக்குக்காக வரும் விவாகரத்து தம்பதி, போலீஸ் கான்ஸ்டபிள் என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு
இஷான் சாப்ராவின் இசையும், சந்துரு செல்வராஜின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்
நிவின்பாலியின் இரண்டு ஹிட் படங்களான 1983, ஆக்சன் ஹீரோ பைஜூ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அப்ரிட் ஷைன் நிவின்பாலியுடன் மீண்டும் இணைந்து உருவாக்கியுள்ள மூன்றாவது ‘ஹிட்’ படம்தான் ‘மஹாவீர்யர்’