Take a fresh look at your lifestyle.

“அந்த பாடலை கேட்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்” – இசையமைப்பாளர் டி.இமான்!

149

சென்னை.

இசை தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு கலை வடிவம். மனிதர்களின் உணர்ச்சிகளுக்கு வாழ்வியல் மருந்தாக இருப்பது திரை இசை. எத்தகைய பெரிய துன்பங்களையும் நல்ல இசை ஆறுதல் படுத்திவிடும்.  அதிலும் நமக்கு நெருக்கமான மொழியும்,இசையும் சேரும் போது எத்தகைய நெஞ்சையும் கரைய செய்து விடும். அது போல் தமிழர்களின் நெஞ்சங்களை தான் இசை மூலம் நிறைய செய்தவர் டி.இமான். தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குறிய இசையமைப்பாளர்களில் ஒருவர் டி. இமான். பெரிய படமோ, சின்ன படமோ இவரது பாடல்களே  அந்த படத்திற்கு தனி அந்தஸ்தை கொடுத்து விடும். இருபது ஆண்டுகள் என்ற அசாதாரணமான இமானின் இசைப் பயணத்தில் 100 மேற்பட்ட  படங்களுக்கு இசையமைத்து 150 புதிய பாடகர்களை அறிமுகப்படுத்துவது என்பது  அவ்வளவு எளிதான காரியமில்லை.

2002 ஆம் ஆண்டு இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார் டி.இமான். இந்த இருபது ஆண்டுகளில் எந்த ஆடம்பரமும், ஆர்ப்பாட்டமும் இல்லாத அற்புதமான இசை பயணம் இவருடையது. மெலடியா?, குத்துப்பாடலா? எதிலுமே தனித்து நிற்கக் கூடிய ஒலி வடிவத்தை தனது தனித்த அடையாளமாக்கிக் கொண்டிருக்கிறார். அவரது இசையின் வடிவம் “மாஸ்+கிளாஸ்” என சமமாக பயணித்து. அடுத்தடுத்த வெற்றிகளை இமானுக்குத் தந்து கொண்டு இருக்கிறது.

‘பள்ளி படிக்கும்போதே கிபோர்டு பிளேயராக தனது இசை பணியை துவங்கி  நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பியானா வாசித்து. பிறகு இசையமைப்பாளர் ஆதித்யன், ஹாரிஸ் ஜெயராஜின் தந்தை உள்ளிட்ட சில இசையமைப்பாளர்களிடம் பணியாற்றி, சுமார் 250 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கும் இசையமைத்தது. என இமானின் இசை மீதான காதல் மெட்டுக்குள் அடங்காதது. இந்த இருபது வருட இசை பயணத்தில் தனக்கு என தனி இடத்தை உருவாக்கியது மட்டும் அல்ல இமானின் சாதனை. நல்ல குரல் எங்கு இருந்தாலும் தேடி சென்று அந்த கலைஞர்களுக்கான அங்கீகாரத்தையும் உருவாக்கி கொடுத்து இருக்கிறார். இதுவரை 150 க்கும் மேற்பட்ட புதிய குரல்களை எனது இசையில் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அவர்களில் 80 சதவீதத்திற்கும் மேல் தமிழர்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொச்சிப்பட்டியைச் சேர்ந்த கண் பார்வை தெரியாத திருமூர்த்தி என்பவர் விஸ்வாசம் படத்தில் வரும் ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பார்த்து. அவரை கூட்டி வந்து சீறு, அண்ணாத்தே படத்தில் பட வைத்தார் இமான். வைக்கம் விஜயலட்சுமியை என்னமோ எதோ படத்தில் புதிய உலகை ஆள போகிறேன் என்ற பாடல் மூலம் தமிழில் முதலில் பட வைத்தார். வேடந்தாங்கல் கிராமத்தில் புத்தர் கலை குழுவில் பறை இசைத்து கிராமிய பாடல்கள் பாடி கொண்டு இருந்த நாட்டுபுற பாடகரான மகிழினி தமிழ்மாறனை கும்கி படத்தின் கையளவு நெஞ்சத்துல பாடல் முலம் திரைக்கு அறிமுகப்படுத்தினர். வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்துல ஊதா கலரு ரிப்பன் பாடல் மூலம் ஹரி ஹர சுதன் அறிமுகபடுத்தினார். நாட்டுபுற பாடகரான செந்தில் கணேஷ் சீமாராஜா படத்தில் பயன்படுத்தி இருப்பார். இப்படி  திறமையானவர்களை அடையாள படுத்தும் இமானின் பட்டியலில் தற்போது புதிதாக சேர்த்து இருப்பவர் ஸ்வஸ்திகா சுவாமிநாதன் இது குறித்து இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வளர்ந்து வரும் பாடகரான ஸ்வஸ்திகா சுவாமிநாதனின் ஆத்மார்த்தமான குரலில் யுக பாரதி வரிகளில்  உருவாகி உள்ள அணையா விளக்கு  பாடலை தான் இசையில் விரைவில் வெளியாக இருக்கும் பப்ளிக் திரைப்படத்தில் கேட்க ஆவலுடன் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

ஏற்கனவே பப்ளிக் படத்தின் போஸ்டர்கள் sneak peakகள் இணையத்தில் வைரல் ஆகின. தற்போது இந்த படத்தின் இசை குறித்தும் அதில் இடம் பெற்று உள்ள பாடல் மற்றும் சிங்கர் குறித்தும் இமான் ட்விட் செய்து இருப்பது படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.