*’தில் ராஜு ட்ரீம்ஸ்:’ ஆர்வமுள்ள சினிமா திறமையாளர்களுக்கான புதிய தளம் வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது!*
தெலுங்கு சினிமாவில் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக பல பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்கள் மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களைத் தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனர் மூலம் கொடுத்தவர் தயாரிப்பாளர் தில் ராஜூ. பல புதிய திறமையாளர்களையும் கண்டெடுத்து சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார். அடுத்த தலைமுறை சினிமா திறமைகளைக் கண்டறிந்து ஆதரிப்பதற்காக ‘தில் ராஜு ட்ரீம்ஸ்’ என்ற பிரத்யேக தளத்தை தற்போது அறிமுகப்படுத்துகிறார்.
இந்த ஜூன் மாதம் தொடங்கப்படும் தில் ராஜு ட்ரீம்ஸில் ஆர்வமுள்ள இயக்குநர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தலாம். நீங்கள் 24 கலைகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருந்தாலோ அல்லது சினிமாவுக்கு புதியவராக இருந்தாலும் இந்த தளம் உங்கள் திறமைக்கான வாய்ப்பு வழங்குகிறது. தடைகளை நீக்கி, பரிந்துரை இல்லாத உண்மையான திறமையாளர்கள் பிரகாசிக்கக்கூடிய நியாயமான தளமாக இது இருக்கும். வாய்ப்புகளை ஜனநாயகப்படுத்துவதும், புதிய திறமைகளை மேம்படுத்துவதும், இந்திய சினிமாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதும் இந்த தளத்தின் குறிக்கோள். உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஒரு கதையோ அல்லது திறமையானவராகவோ நீங்கள் இருந்தால், இந்தத் தளத்தில் இப்போதே பதிவு செய்து கொள்ளுங்கள்.
’தில் ராஜூ ட்ரீம்ஸ்’ தளம் அறிமுகத்தைத் தொடர்ந்து திறமையாளர்களுக்கான களம் திறக்கப்படும். அனைத்து பின்னணியிலிருந்தும் திறமையாளர்கள் தங்கள் ஐடியாக்களை முன்வைக்க வாய்ப்பளிக்கிறது. ஒரு நிபுணர் குழு தளத்தில் வரக்கூடிய உள்ளீடுகளை மதிப்பாய்வு செய்து அதை ஷார்ட் லிஸ்ட் செய்ய, பின்பு தில் ராஜு தனிப்பட்ட முறையில் பட்டியலிடப்பட்ட ஸ்கிரிப்ட்களை மதிப்பீடு செய்வார். ஆண்டுதோறும் நான்கு முதல் ஐந்து படங்களைத் தயாரிப்பதன் மூலம், நல்ல கதையம்சம் சார்ந்த படங்களைக் கொடுக்க இந்த தளம் உறுதி ஏற்றுள்ளது..
ஜூன் மாதம் நடைபெறும் பிரமாண்டமான வெளியீட்டு நிகழ்விற்கான முன்பதிவிற்கு அணுக: dilrajudreams.com
Media Contact: D’one
Point of contact : Abdul.A.Nassar
Email ID: d.onechennai@gmail.com
Ph. No: 99418 87877