Take a fresh look at your lifestyle.

Kanguva Movie Review

11

ஸ்டூயோகிரீன் K.E. ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, நட்டி நடராஜ்;யோகிபாபு, கருணாஸ், கோவை சரளா, கே எஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் கங்குவா
இசை தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு வெற்றி
 
கதை
 
பட ஒப்பனிங்கில் ஜீட்டா எனும் சிறுவனை பிடிக்க வில்லன் குரூப் துரத்துகிறது. அந்த பையன் தப்பித்து டிரெயினில் ஏறி தப்பிக்கிறான்.
ஜீட்டா எனும் சிறுவன் அதீத மூளை ஆற்றல் கொண்டவனாக இருக்கிறான். , அது ஏன்? அவன் யார்? அவனை வில்லன் ஆட்கள் ஏன் துரத்துகிறார்? என்று எதையுமே சொல்லாமல் கதைக்குள் இயக்குநர் சிவா நம்மை அழைத்துச் செல்கிறார். கோவாவில் பவுண்ட்டி ஹண்டர் என சூர்யாவையும் அவருக்கும் அவரது எக்ஸ் லவ்வர் திஷா பதானிக்கும் இடையே சண்டை நடப்பது போன்ற காமெடிகள் அரங்கேறுகின்றன. இந்த சூழ்நிலையில் வில்லன் ஆளை சூர்யாவும் யோகிபாபுவும் துப்பாக்கியால் சுட்டுகொள்வதை சிறுவன் ஜீட்டா பார்த்துவிடுகிறான். இந்த சூழ்நிலையில் வில்லன் ஆட்கள் ஜீட்டாவை கடத்தி செல்ல யோகிபாபுவிடம் ஜீட்டாவை காப்பாற்றனும்னு என் மனசு சொல்லுது என்று சொல்ல கதை பல ஆண்டுகளுக்கு பின்னோக்கி செல்கிறது.
 
ஜீட்டா என்ற சிறுவனுக்கும் சூர்யாவுக்கும் இடையேயான தொடர்பை 1070 எனும் காலக்கட்டத்தில் காட்டுகின்றனர்.
 
ஐந்தீவில் ஒரு இடமாக பெருமாச்சி எனும் இடத்தை கங்குவாவின் அப்பா ஆட்சி செய்து வருகிறார். அவர்களுக்கு போர் தான் வாழ்வு முறை. நெருப்பு தான் கடவுள். இன்னொரு இடத்தை பாபி தியோல் ஆட்சி செய்து வருகிறார். அவர்கள் வாழும் பகுதிக்கு ரத்தம் தான் கடவுள். நிலவு வழியாக பீரியட் போர்ஷனுக்கும் நிகழ்காலத்திற்கும் படம் பயணிக்கிறது. கங்குவா காலத்தில் ரோமானிய அரசர் ஐந்தீவில் பெருமாச்சி எனும் கங்குவாவின் இடத்தை பிடிக்க முற்படுகிறார். அவருக்கு எட்டப்பனாக இருந்து நட்டி நட்ராஜ் உதவுகிறார். நூத்து கணக்கான பெருமாச்சி வீரர்களை கப்பல் கட்டும் வேலைக்கு அழைத்துச் செல்கிறேன் என நட்டி நடராஜ் அழைத்து சென்று அவர்களை கொன்று குவிக்கிறார் நட்டி நடராஜ் செய்த துரோகம் கருணாஸ் மூலமாக கங்குவாவுக்கு (சூர்யா) தெரிய வர நட்டி நட்ராஜை சூர்யா அடித்து மரத்தில் கட்டி வச்சு கட்டைகளை அடுக்கி எரிக்காறார். நட்டி நடராஜின் மனைவி சூர்யாவிடம் என் மகன் ஜீட்டாவை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி சத்தியம் வாங்கிட்டு கணவன் நட்டி நடராஜூடன் தானும் சேர்ந்து எரிந்து விடுகிறாள். சூர்யாவின் பெருமாச்சி ஊர் மக்கள்
நட்டி நட்ராஜின் மகனையும் கொல்ல வேண்டும் என சொல்ல, சூர்யாவோ இவன் என் மகன் என ஜீட்டாவை காப்பாற்ற துடிக்கும் சூர்யாவுக்கு அந்த சிறுவனால் தனது ஊரையே விட்டு சிறுவனுடன் வெளியே வருகிறார். ஜீட்டாவை பாசமாக வளர்க்கிறார். சூர்யா எதிரியுடன் சண்டையிடுகையில் ஜீட்டா சூர்யாவை நெஞ்சில் குத்துகிறான். உயிர் பிழைத்த சூர்யா ஜீட்டாவிடம் என் மக்களையும் மண்ணையும் காப்பாற்றிய பிறகு என்னை கொள் அதுவரை அவகாசம் கொடு என்று கேட்கிறார் சூர்யா. தனது மண்ணையும் மக்களையும் காப்பாற்ற முற்படும்போது. ஜீட்டாவை சூர்யாவால் காப்பாற்ற முடியாமல் போகிறது. இறந்த காலத்தில்.
 
நிகழ்காலத்தில் மீண்டும் அந்த சிறுவனை பார்த்தவுடன் அவனை காப்பாற்ற போராடும் பிரான்சிஸ் (சூர்யா) கடைசியில் சிறுவனை காப்பாற்ற என்ன செய்கிறார். அந்த சிறுவனுக்குள் இருக்கும் சக்தி என்ன? என்கிற விதத்தில் படம் நிலவை மையமாகக் கொண்டு இரண்டு காலக்கட்டத்தை தெளிவாக சொல்லியிருப்பதே கங்குவா படத்தின் கதை.
 
சூர்யாவின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம். இந்த படத்தை எப்படியாவது வெற்றிப் படமாக கொடுக்க வேண்டும் என கடுமையாக உழைத்து நடித்திருக்கிறார்.
பாபி தியோல் நடிப்பு மிரட்டல். . திஷா பதானிக்கு இந்த படத்தில் குறைவான நேரம் என்றாலும் அதை சிறப்பாக செய்திருக்கிறார். நட்டி நடராஜ் நன்றாக நடித்துள்ளார்.
யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி அடிக்கும் காமெடிகள் எல்லாம் கிரிஞ்ச் என சூர்யாவே சொல்லி விடுகிறார். சிறுவனின் நடிப்பு அருமை.
கிளைமேக்ஸில் வரும் கார்த்தியின் கேமியோ சூப்பர்.
கருணாஸ் கே எஸ் ரவிக்குமார் கோவை சரளா
மற்றும் இதில் நடித்த அனைவருமே அவரவர் கேரக்டர் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ஆரம்பத்தில் வரும் யோலோ பாடல் திஷா பதானியின் கவர்ச்சியில் ரசிகர்களை ஜாலி ஆக்குகிறது. ஆதி நெருப்பே பாடலில் நெருப்பை காலில் கட்டிக் கொண்டு ஆடும் காட்சிகள் அருமை. மன்னிப்பு பாடல் மற்றும் தலைவனே பாடல் ரசிக்கவைக்கிறது.
பிண்ணனி இசை பல இடங்களில் எரிச்சல் பட வைக்கிறார். ஒளிப்பதிவாளர் வெற்றியின் உழைப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம். மறைந்த ஆர்ட் டைரக்டர் மிலன் மற்றும் அவரது மனைவி கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட சிறு கத்தி முதல் பெரிய கப்பல் வரை பிரம்மிக்க வைக்கிறது.
விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் எல்லாம் வேறலெவல்.
 
இயக்குநர் சிவா அவர்கள் 1070, 2024 என இரண்டு கதைகளை சொல்லாமல் 1070 கங்குவா கதையை மட்டுமே சுவாராஸ்யமாக சொல்லியிருந்தால் சூர்யாவின் உழைப்புக்கு பலன் கிடைத்திருக்கும். இருந்தாலும் அதிக பொருட்செலவில் 3D யில் நல்ல திரைப்படத்தை கொடுக்க முயற்சி செய்த ஒட்டு மொத்த குழுவிற்கு பாராட்டுக்கள்.