RSSS பிக்சர்ஸ் சார்பில் எஸ் தணிகைவேல் தயாரிப்பில் புதியவன் இராசையா இயக்கத்தில்
புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், மாணிக்கம் ஜெகன், தனுவன் மற்றும் பலர் நடித்து
அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் படம் ஒற்றைப் பனைமரம்.
கதை
இலங்கையின் உள்நாட்டுப் போரில் தப்பிய மூன்று தமிழ்த் தமிழர்களின் எழுச்சியூட்டும் கதை. அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப போராடும் போது ஒரு தற்காலிக குடும்பத்தை உருவாக்குகிறார்கள். சுந்தரம், தனது கர்ப்பிணி மனைவியை இழந்து தவிக்கும் ஒரு மனிதன், கஸ்தூரி, ஒரு போராளியின் விதவை மற்றும் ஒரு அனாதையான இளம்பெண், அனைவரும் பகிரப்பட்ட அதிர்ச்சியால் தங்களைக் கட்டிப்பிடித்து, 2009 இல் போர் முடிவடைந்த பின்னர் ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையைக் காண்கிறார்கள்.
இவர்கள் முன்னேற வேண்டும் என்று தீர்மானித்து, பாலா என்ற நபரின் உதவியோடு வேலை தேடுகிறார்கள். அவர்களின் பயணம் போருக்குப் பிந்தைய வாழ்க்கையின் கஷ்டங்களை பிரதிபலிப்பதே படத்தின் மீதிக்கதை.
புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், மாணிக்கம் ஜெகன், தனுவன் என இதில் நடித்த அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்கள்.
தேசிய விருது பெற்ற சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பையும், சர்வதேச விருது பெற்ற இலங்கை ஒளிப்பதிவாளர் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவையும் சிறப்பாக செய்துள்ளனர்.
37 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 12 விருதுகளையும் இப்படம் குவித்திருக்கிறது.
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அஷ்வமித்ரா இசை அமைத்திருக்கிறார். அவரது இசை தமிழ் பாரம்பரிய வாத்தியங்களை மட்டுமே வைத்து இசையமைத்திப்பது படத்திற்கு ஒரு உயிரோட்டமாக அமைந்துள்ளது.
சிறந்த இயக்குனர் விருது பெற்ற ”மண்” பட இயக்குனர் புதியவன் ராசையாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம். ஈழத்தில் போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இக்கதை, சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கும் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக நகர்த்தும் கதையாக எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார் பாராட்டுக்கள்.