S T U D I O G R E E N
மற்றும்
N E E L A M P R O D U C T I O N
இணைந்து
வழங்கும்
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்
A.E.ஞானவேல் ராஜா தயாரிப்பில்
பா. ரஞ்சித்
இயக்கத்தில்…
G.V. பிரகாஷ் குமார்
இசையில்…
A. கிஷோர் குமார்
ஒளிப்பதிவில்…
சீயான் விக்ரம்,
பார்வதி திருவோத்து,
மாளவிகா மோகனன்,
பசுபதி,
அரிகிருஷ்ணன்,
ஹாலிவுட் நடிகர்
டேனியல் கால்டாகிரோன்
சம்பத் ராம்
மற்றும்
பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம்
தங்கலான்
Edit Image
கதை
கதை 17-ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. வட ஆற்காட்டில் பண்டைய அரசர்கள் பிடுங்கிக் கொண்ட நிலங்களில் இருந்து எஞ்சிய இடத்தில் விவசாயம் செய்து வரும் ஒரு சிறிய பூர்வக்குடி இனக்குழுவின் தலைவன் தங்கலான் (விக்ரம்). மனைவி கங்கம்மாள் (பார்வதி), குழந்தைகள் என வாழ்ந்து வருகிறார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக இப்போதைய கோலார் பகுதியில் தன்னுடைய மூதாதையர்கள் தங்கம் எடுத்துக் கொண்டிருந்ததையும், சிற்றரசன் ஒருவனின் பேராசையால் அவர்கள் தூண்டப்பட்டு, அப்பகுதியின் காவல் தேவதையாக விளங்கும் ஆரத்தி (மாளவிகா மோகனன்) என்ற பெண்ணால் தடுக்கப்பட்டதையும் கதையாக தன் குழந்தைகளுக்கு சொல்கிறார்.
ஒரு கட்டத்தில் ஜமீன்தார் ஒருவரால் எஞ்சியிருக்கும் நிலமும் விக்ரமிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலையில், விக்ரமின் குழுவினருக்கு உதவ முன்வருகிறார் க்ளெமென்ட் என்ற வெள்ளைக்காரர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தங்கலானின் மூதாதையர்கள் எடுத்த அதே பகுதியில் தனக்கு தங்கத்தை எடுத்துக் கொடுத்தால், அதில் பங்கு தருவதாக உறுதியளிக்கிறார்.
வாழ்வாதாரத்திற்காக இதற்கு ஒப்புக் கொள்ளும் விக்ரம் தன்னுடைய கூட்டத்தில் இருந்து சிலரை அழைத்துக் கொண்டு அந்த வெள்ளைக்காரர்களுடன் புறப்படுகிறார். செல்லும் வழியில் அவர்களுக்கு ஏற்படும் இடையூறுகள் என்னென்ன? அவர்களுக்கு தங்கம் கிடைத்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
விக்ரம் தங்கலானாக வாழ்ந்திருக்கிறார். விக்ரம் மனைவியாக பார்வதி சிறப்பாக நடித்துள்ளார். பசுபதியின் நடிப்பு பாராட்டத்தக்கது. மிளவிகா மோகன் நடிப்பு அருமை. மற்றும்
அரிகிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன், சம்பத் ராம் என இதில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.G V பிரகாஷ்குமாரின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது. A. கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
இயக்குநர் பா ரஞ்சித் தஙகலான் கதையை சிறப்பாக திரைக்கதையமைத்து எல்லோரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.