சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா மடோனா அபிராமி ரோபோசங்கர் YG மகேந்திரன் ஜான்விஜய் யோகிபாபு மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ஜாலியோ ஜிம்கானா
கதை
பிரபு தேவா அநீதிக்கு போராடும் ஒரு வக்கீலாக இருக்கிறார். அபிராமிக்கு 3 மகள்கள் உள்ளனர். மடோனா செபாஸ்டியன் அதில் மூத்தவர்.
பவானியின் குடும்பம் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு எம்.எல்.ஏவிடமிருந்து ஒரு பெரிய ஆர்டர் கிடைக்கிறது. அதை இவர்களும் சிறப்பாக செய்து கொடுக்கிறார்கள். ஆனால், அதற்கான பணத்தை கொடுக்காமல் எம்எல்ஏ ஆட்கள் ஏமாற்றுகிறார்கள். இதைக் கேட்க போன பவானியின் தாத்தாவையும் அவர்கள் தாக்கி விடுகிறார்கள். இதனால் பவானியின் தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
மேலும், பவானியின் தாத்தா ஹாஸ்பிடலில் இருப்பதால் இவர்களால் கடையை நடத்த முடியாமல் தவிக்கிறார்கள். உடனே தாத்தா, வழக்கறிஞர் பூங்குன்றனை(பிரபுதேவா) சந்தித்து பிரச்சனையை சொல்ல சொல்கிறார். பவானி குடும்பமும் பூங்குன்றனின் உதவியை கேட்டு போகிறார்கள். ஆனால், அங்கு அவரை யாரோ கொலை செய்து விடுகிறார்கள். அந்த கொலை பழி தங்கள் மீது விழுந்து விடுமோ என்ற பயத்தில் அவருடைய உடலை மறைத்து வைக்க பவானி குடும்பம் முயற்சிக்கிறது.
அதற்கு பின்னால் நடக்கும் காமெடி கலாட்டா தான் படத்தின் மீதி கதை.
படம் முழுவதுமே பிரபுதேவா சடலமாக நடித்து எல்லோரையும் சிரிக்கவைக்கிறார். YG மகேந்திரன் நடிப்பும் அருமை.
அபிராமியுடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது.
மடோனாவும் நன்றாக நடித்து சிரிக்கவைக்கிறார்.படத்தில் வரும் யோகிபாபு ஜான் விஜய், ரோபோ சங்கர், எம்எஸ் பாஸ்கர் என எல்லோருமே சிரிக்க வைக்கிறார்கள்.
கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
விநாயகமூர்த்தியின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
ஒரு பிணத்தை வைத்து 4 பெண்கள் படும் அவஸ்த்தையை மிகவும் நகைச்சுவையாக எல்லோரும் ரசிக்கும்படி இயக்கியுள்ளார் சக்தி சிதம்பரம். பாராட்டுக்கள்.