ஈஸ்வர கார்த்திக் இயக்கத்தில் சத்யதேவ் பிரியா பவானிசங்கர் டலி தனஞ்சயா சத்யராஜ் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ஜீப்ரா
கதை
பிரபல வங்கியில் ரிலேஷன்ஷிப் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார் நாயகன் சத்யதேவ். அவரின் நீண்ட நாள் காதலியான பிரியா பவானி சங்கர் இதே பேங்கிங் பணியை வேறு ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். இவர் ஒரு கஸ்டமருக்கு நான்கு லட்ச ரூபாயை அனுப்புவதற்கு பதில் வேறு ஒருவருக்கு தவறுதலாக நம்பர் மாற்றி செலுத்தியதால் அந்த பணம் அவருக்கு சென்று விடுகிறது. இதனால் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ளும் நாயகியை மற்றொரு வங்கியில் வேலை செய்யும் நாயகன் சத்யதேவ் தனது மூளையை பயன்படுத்தி சில பல தகிடு திட்டங்கள் போட்டு பணத்தை மீட்டு கொடுத்து விடுகிறார். இந்த சிக்கலில் இருந்து தப்பித்த நாயகன் சத்யதேவ், தான் போட்ட தகடு திட்டத்தால் வேறு ஒரு பெரிய பண பிரச்சனை சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். வில்லன் தாலி தனஞ்செயாவின் மிகப்பெரிய கோடிக்கணக்கான பணம் ஒன்று மாறி மாறி வேறு வேறு அக்கவுண்டுகளுக்கு நாயகன் பெயரில் பணப்பரிமாற்றம் நடந்து விடுகிறது. அந்த பணத்தை நான்கு நாட்களில் மீட்டுக் கொடுக்க வேண்டும் என வில்லன் ஹீரோவுக்கு கெடு வைக்கிறார். மாத சம்பளம் வாங்கும் நாயகன் அவ்ளோ பெரிய தொகையை வில்லனுக்கு திருப்பி கொடுத்தாரா? இல்லையா? வில்லனுக்கும் நாயகனுக்குமான இந்த பண ரேஸில் யார் ஜெயித்தார்கள்? இதுவே இப்படத்தின் மீதி கதை.
படத்தில் நாயகன் சத்யதேவ் ஒரு மிகப்பெரிய புத்திசாலியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
படத்திற்கு வில்லன் என்று சொல்வதை விட இன்னொரு நாயகன் என்று சொல்லலாம் அந்த அளவு நாயகனுக்கு மிக ஈகுவல் என்பதை தாண்டி கிட்டத்தட்ட நாயகனாகவே நடித்து இருக்கிறார் கன்னட நடிகர் தாலி தனஞ்செயா.
பிரியா பவானி சங்கர் கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார்.
காமெடிக்கு மிகச் சிறப்பாக கை கொடுத்திருக்கிறார் நடிகர் சத்யா அக்காலா. இவர் வரும் காட்சிகள் எல்லாம் தியேட்டரில் கைதட்டல்களாலும் விசில்களாலும் அதிர்கிறது.
சின்ன கதாபாத்திரம் மாதிரி வந்தாலும் கடைசியில் வந்து பட்டையை கிளப்புகிறார் நடிகர் சத்யராஜ்
வில்லனாக நடித்திருக்கும் சுனில் தனக்கு என்ன வருமோ அதையே இந்த படத்திலும் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.
மற்றபடி இதில் நடித்த அனைத்து நடிகர்களும் அவரவர் வேலையை மிக சிறப்பாக செய்துள்ளனர்.
ரவி பஸ்ரூரின் இசை ரசிக்கவைக்கிறது.
பொன்மார் ஒளிப்பதிவில் காட்சிகள் மிக மிக நேர்த்தியாகவும் அதே சமயம் மிக மிக பிரம்மாண்டமாகவும் அமைந்திருக்கிறது.
வங்கித் துறையை பின்னணியாகக் கொண்டு காதல், லட்சியம் மற்றும் நிதி மோசடியை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியுள்ளார் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக். பாராட்டுக்கள்.