Take a fresh look at your lifestyle.

Emakku Thozhil Romance Movie Review

14

திருமலை தயாரிப்பில் பாலாஜி கேசவன் இயக்கத்தில் அசோக்செல்வன் அவன்டிகா மிஷ்ரா ஊர்வசி அழகம்பெருமாள் M S பாஸ்கர் படவாகோபி பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் எமக்கு தொழில் ரொமான்ஸ்.
 
கதை
 
தோல்வி படம் கொடுத்த இயக்குநரிடம் உதவி இயக்குநராக அசோக் செல்வன் வேலை செய்தததால் பலர் கிண்டலும் கேளியும் செய்கின்றனர். இந்த சூழ்நிலையில் கதாநாயகி அவன்டிகா மிஷ்ராவை பார்த்ததும் காதல் வருகிறது. இந்த காதலை உடனே சொல்லிட வேண்டும் இல்லையென்றால் இளம் பருவத்திலிருந்து சில காதலிகளிடம் அசோக்செல்வன் காதலை சொல்லாமல் விட்டதால் அவர்கள் வேறொருவரை திருமணம் செய்து அவர்கள் பிள்ளைகளுக்கு தனது பெயரை வைத்துவிடுகிறார்கள் என்று கதாநாயகியிடம் தன் நிலமையை சொல்லி காதலை சொல்கிறார் அசோக் செல்வன். அவனிகா முதலில் மறுக்க பின் காதலுக்கு சம்மதம் சொல்கிறார். இருவரும் சந்தோஷமாக காதலிக்கும் வேளையில் இருவரும் பிரியும்படி ஒரு விஷயம் நடக்கிறது. அது என்ன? அதன் பிறகு அசோக் செல்வன் அவன்டிகா மிஷ்ரா ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கும் படமே எமக்கு தொழில் ரொமான்ஸ்.
 
அசோக்செல்வன் காதல் காமெடி என சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியாக அவன்டிகா மிஷ்ரா காமெடி நடிப்பில் ஸ்கோர் செய்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஊர்வசி நகைச்சுவையில் கலக்குகிறார். அழகம்பெருமாள் MS பாஸ்கர் படவா கோபி பகவதி பெருமாள் என இதில் நடித்த அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து கலகலவென சிரிக்க வைத்துள்ளார்கள். கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
நிவாஸ் K பிரசன்னாவின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
 
இயக்குநர் பாலாஜி கேசவன் காதல் கதையை எல்லோரும் ரசிச்சு சிரிக்கின்ற வகையில் கொடுத்துள்ளார். பாராட்டுக்கள். தயாரிப்பாளர் இயக்குநர் திருமலைக்கும் வாழ்த்துக்கள்