Take a fresh look at your lifestyle.

நயன்தாரா – பியோண்ட் தி ஃபேரி டேல் விமர்சனம்:

11

நயன்தாரா – பியோண்ட் தி ஃபேரி டேல் விமர்சனம்:
 
நடிகை நயன்தாரா பிறந்தநாளையொட்டி பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ஆவணப்படம் நயன்தாரா பிறந்தநாளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த ஆவணப்படத்தில் திரையுலகில் தான் சந்தித்த சவால்கள், காதல் தோல்வி, கல்யாணம் என அனைத்தை பற்றியும் பேசி இருக்கிறார் நயன்தாரா. இந்த ஆவணப்படத்தை இயக்குனர் அமித் கிருஷ்ணன் இயக்கி உள்ளார்.
 
நயன்தாராவிற்கு கடந்த 2022-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் உடன் திருமணம் ஆனது. அப்போதே இந்த ஆவணப்படமும் எடுத்து முடிக்கப்பட்டது. இருப்பினும் தனுஷிடம் இருந்து நானும் ரெளடி தான் பட பாடல்களை ஆவணப்படத்தில் பயன்படுத்த தடையில்லா சான்று கிடைக்காததால், கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஆவணப்படம் ரிலீஸ் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், பல்வேறு தடைகளை தாண்டி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நயன்தாராவின் ஆவணப்படம் ஸ்டிரீம் ஆகி உள்ளது. இந்த ஆவணப்படம் 1 மணிநேரம் 22 நிமிடம் ஓடக்கூடியது ஆகும்.
 
நயன்தாராவின் வாழ்க்கை பொழுதுபோக்கின் பளபளப்பான உலகில், அவர் தனது முதல் மனசினக்கரே படத்திற்காக திரைப்படத் தயாரிப்பாளர் சத்யன் அந்திக்காடால் எப்படிக் காணப்பட்டார், அய்யாவில் எப்படி அறிமுகமானார். சந்திரமுகியின் மூலம் வெற்றியடைந்து தமிழில் அவருக்குப் பெரிய இடைவெளி, மீண்டும் பில்லா மூலம் அவரது புகழ், உயர்ந்தது. சில உறவுகள், சர்க்குப் பிறகு கிட்டத்தட்ட ஓய்வு. ராம ராஜ்ஜியம் படத்தில் நடிக்கும்போது சில சர்ச்சைகள். இறுதியில் நானும் ரவுடி தான் படப்பிடிப்பு தளத்தில் அவரது காதலை விக்னேஷ் சிவனிடம் வெளிப்படுத்தினார். ஆனால் அதிகம் அறியப்படாத நன்யன்தாராவையும் அவரது வாழ்க்கையையும் இந்த ஆவணப்படத்தில் அழகாக சொல்லியுள்ளார் இயக்குநர்.
 
நயன்தாரா நம்பிக்கையான முகம்”, “பெண் சக்தி”, “தேவதை” போன்ற வார்த்தைகள் நயன்தாராவைப் பற்றி பல கலைஞர்கள் மற்றும் இயக்குனர்கள் பேசுகிறார்கள். நயன்தாரா அனுபவித்த வலி சில பகுதிகள் தெளிவாக சித்தரிக்கின்றன, அவருடைய குடும்பம் எப்படி கஷ்டப்பட்டது, என்பதையும் சொல்லியிருக்கிறார்கள்.
 
நயன்தாரா தனது முதல் உறவைப் பற்றியும், காதலை நம்பிக்கை எப்படி வெல்கிறது என்பதைப் பற்றியும் பேசுகிறார். நயன்தாரா தனது மனநிலை குறித்தும், அவர் எப்படி வளர்ந்தார் என்பது குறித்தும் பேசியிருக்கிறார்
 
நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரி டேல் என்பது நயன்தாரா வாழ்க்கையின் அழகான கதையாகும்
 
நயன்தாரா உடன் பணியாற்றிய அனுபவம் பற்றி நாகார்ஜுனாவும் நெல்சனும் பேசி உள்ளது அருமையாக உள்ளது.
 
மொத்தத்தில் இந்த ஆவணப்படம் எல்லோரும் பார்த்து ரசிக்ககூடிய வகையில் உள்ளது.