சந்தோஷ் கோபிநாத் இயக்கத்தில்
பிரஜன், சஹானா, ஆடுகளம் நரேன் மற்றும் பல நடத்து வெளியாகியிருக்கும் படம் சேவகர்
கதை
கதையின் நாயகன் விஜய் சமூக ஆர்வலாக இருக்கிறாள் தன் மக்களுக்கு எப்பவும் சேவை செய்யும் சேவனாக இருக்க வேண்டும் என்பது தான் இவரின் ஆசை. இதனாலேயே தன்னால் முடிந்தது மக்களுக்கு எப்போதும் செய்கிறார் இவருக்கு ஒரு முறைப்பெண்ணும் உள்ளது அந்த முறைப்பெண்ணும் இவரையே சுற்றி வருகிறார் விஜய் இப்படி நல்லது செய்து மக்கள் மனதில் இடம் பிடிப்பது ஒரு சில அரசியல்வாதிகளுக்கும் போலிசுக்கும் பிடிக்காமல் போகிறது. இதனால் கோபமடைந்த அமைச்சர் விஜய்யை தீரத்துகட்டும்படி போலிஸிடம் சொல்கிறார். எஸ் ஐ தாஸ் விஜய் குடும்பத்திடம் பிரச்சினை செய்கிறார் இதனால் கோபமடைந்த விஜய் எஸ் ஐ தாஸ் அடிக்கும்போது இறந்து விடுகிறார் இதனால் விஜய் போலீசாரால் தேடப்படுகிறார் கடைசியில் இந்த பிரச்சனையிலிருந்து இவய் வெளியே வந்தாரா? இல்லையா? என்பதும் விஜய்யின் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பிரஜன் பொதுமக்களுக்கு நல்லது செய்பவராகவும் அநியாயத்தை தட்டி கேட்கும் வீரனாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஷகானா நன்றாக தடித்துள்ளார். போலீஸ் அதிகாரி வரும் போஸ் வெங்கட் நன்றாக நடித்துள்ளார். அமைச்சராக ஆடுகலம் நரேன் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் மற்றும் இதில்நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
மக்களுக்கு நல்லது செய்யும் நல்லவனுக்கும் அதிகாரத்தால் ஊரை ஏமாற்றும் அமைச்சருக்கும் இடையே நடக்கும் கதையை மையமாக வைத்து படதத்தை இயக்கியிருக்கிறார். இயக்குனர் சந்தோஷ் கோபிநாத். ஒவ்வொரு அமைச்சரும் நம் நாட்டின் சேவகர்கள் என்று சொல்லி உள்ளார். பாராட்டுக்கள்.