Take a fresh look at your lifestyle.

Deepavali Bonus Movie Review

10

 

ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி புரொடக்ஷன்ஸ் சார்பில் தீபக் குமார் டாலா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஜெயபால்.ஜெ இயக்கியிருக்கும் படத்தை ஆக்ஷன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் வெளியிடுகிறார்.

இதில் விக்ராந்த், ரித்விகா, மாஸ்டர் ஹரிஷ் நடித்திருக்கும் படம் ‘தீபாவளி போனஸ்’.
தொழில்நுட்ப கலைஞர்கள் :-இசை – மரியா ஜெரால்ட், ஒளிப்பதிவு – கௌதம் சேதுராம், படத்தொகுப்பு – பார்த்திவ் முருகன், நடனம் – நிசார் கான், மக்கள் தொடர்பு : தர்மா, சுரேஷ்
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு நிலையூர் கிராமத்தில் ரவி (விக்ராந்த்) கொரியர் டெலிவரி செய்யும் வேலையும் அவரின் மனைவி கீதா (ரித்விகா) அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டில் வீட்டு வேலை செய்து வருகிறார். அன்றாடம் வேலைக்கு சென்று உழைத்தாலும் ஏழ்மை நிலையில் இருக்கும் இவர்களுக்கு சச்சின் (ஹரிஷ்) என்ற ஒரே மகன் இருக்க கஷ்டத்திலும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்;. தீபாவளி செலவுக்கு, ரவி போனஸை நம்பி இருக்கிறார். தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் தீபாவளி போனஸ் வர தாமதமாக, மகன், மனைவிக்கும் துணிமணி எடுக்க ரவி திண்டாடுகிறார். இந்நிலையில் போனஸ{க்காக போராடும் கொரியர் ஊழியர்களை போலீஸ் பிடித்து சென்று விட ரவிக்கு போனஸ் கிடைப்பது சாத்தியமில்லாமல் போகிறது. இதே நேரத்தில் கீதா கணவருக்காக புது ஹெல்மெட் வாங்க தான் வேலை செய்யும் இடத்தில் கெஞ்சி ரூபாய் 1500 கடன் வாங்கி வர எதிர்பாராதவிதமாக ஹல்மெட் வாங்க முடியாமல் போக அந்த பணத்தை வைத்து கணவனுடன் சேர்ந்து மகனுக்கு துணி வாங்குகிறார். இருந்தாலும் ரவி தீபாவளி செலவிற்காக வேறு வழியில்லாமல் பஜாரில் துணிமணிகளை விற்கும் நண்பனுக்கு உதவி செய்தால் 2000 தருவதாக கூற அங்கே சென்று வேலை செய்கிறார். அப்போது, திடீரென்று நான்கு பேர் வந்து ரவியை அடிக்க போலீஸ் வந்து ரவியை கைது செய்து அழைத்துச் செல்கின்றனர்.ரவிக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்க, போலீஸ் எதற்கு கைது செய்தனர்? ரவி தவறு செய்தாரா? ரவியின் கம்பெனியிலிருந்து போனஸ் கிடைத்ததா? இறுதியில் மனைவி, மகனுடன் தீபாவளி மகிழ்ச்சியாக கொண்டாடினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கொரியர் நிறுவனத்தின் ஊழியர் ரவியாக விக்ராந்த் எளிமையின் உருவமாக, அதிர்ந்து பேசாத குணம், மகனிடம் பாசம், மனைவி மேல் பிரியத்துடன் பணத்திற்காக கஷ்டப்பட்டாலும் நேர்மை தவறாத மனிதராக, மகனுக்கு ஷ_ வாங்க கடைக்காரரிடம் கெஞ்சுவதும், துணிக்கடை முதலாளியிடம் பணத்தை கொடுத்து விட்டு செல்லும் போதும், குடும்பத்தின் சந்தோஷத்திற்காக கிடைத்த பரிசை விற்பது, இறுதியில் புதிய தொழில் தொடங்க எடுக்கும் முடிவு என்று படம் முழுவதும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக செய்துள்ளர்.
வீட்டு வேலை செய்யும் பெண்ணாக ரித்விகா கணவனின் இயலாத நிலையை உணர்ந்து அதற்கேற்றவாறு குடும்பத்தை அரவணைத்துச் செல்லும் அன்பான மனைவியாக, மகன், கணவன் என்று அவர்களின் சந்தோஷத்திற்காக வாழ்வதும், வேலை செய்யும் இடத்தில் அவமானப்பட்டாலும், அதை கண்டு கொள்ளாமல் தன் வேலையை முடித்து விட்டு செல்லும் இடத்திலும், கணவனை காணாமல் பரிதவிப்பது என்று தன் இயல்பான நடிப்பால் கவர்கிறார்.

மகனாக மாஸ்டர் ஹரிஷ் பள்ளியில், வீட்டில் என்று தன்னுடைய குழந்தைத்தனமாக பேச்சால் செய்கையால் கவனிக்க வைக்கிறார். இவர்களுக்கு உறுதுணையாக வரும் அத்தனை கதாபாத்திரங்களும் சிறு வேடம் என்றாலும் படத்தில் நடிப்பில் தனித்துவமாக தெரிகின்றனர்.

மரியா ஜெரால்ட் பாடல்கள் பின்னணி இசையில் ரசிக்க வைத்துள்ளார்.

கௌதம் சேதுராம் காட்சிக் கோணங்கள் அசத்தல் ரகம் என்றால் லாங் ஷாட் டிரோன் ஒளிப்பதிவு படத்தின் வெற்றிக்கு துணை போகிறது.

பண்டிகை என்றால் பணத்தை ஏற்பாடு செய்ய ஏழ்மை நிலையில் இருக்கும் பெற்றோர்கள் எடுக்கும் முயற்சிகள், பரிதவிப்பு, மனதளவு பாதிப்புகள், அவமானங்கள் அதையெல்லாம் பிள்ளைகளின் மகிழ்ச்சி முன்னால் எதுவுமில்லை என்பதை உணர்ச்சிகளின் பிரதிபலிப்பாக படத்திற்கேற்ற டைட்டிலுடன் நிறைவாக கொடுத்துள்ளார் இயக்குனர் ஜெயபால்.ஜெ