ஆதிராஜன் இயக்கத்தில் முதல் காதலைக் கொண்டாடும் “நினைவெல்லாம் நீயடா”: இளையராஜாவின் 1417 – வது படம்;
சிலந்தி ரணதந்த்ரா அருவாசண்ட படங்களை எழுதி இயக்கிய ஆதிராஜனின் எழுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “நினைவெல்லாம் நீயடா”.
இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை லேகா தியேட்டர்ஸ் சார்பில் ராயல் பாபு பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார். இந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் ஜம்பாரா என்டர்டைன்மெண்ட் சார்பில் தர்மராஜ் வேலுச்சாமி வெளியிடுகிறார்.
பிரஜன், மனிஷா யாதவ் சினாமிகா, யுவலட்சுமி ரெடின் கிங்ஸ்லி ரோஹித் மனோபாலா டைரக்டர் ஆர் வி உதயகுமார் , மதுமிதா பி எல் தேனப்பன் முத்துராமன் ரஞ்சன் குமார் தீக்குச்சி தண்டபாணி உட்பட மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படம் பிப்ரவரி 23ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
கதை
கௌதம் தன்னுடன் படிக்கும் மாணவி மலர் விழியை காதலிக்கிறார். கௌதமை அவர் முறைப்பெண்ணான மணிஷா யாதவ் காதலிக்கிறார். கௌதம் மலர்விழியிடம் காதலை சொல்வதற்காக காதல் கடிதம் எழுதி அதை மலர்விழி கையில் கொடுத்து வீட்டில் சென்று படிக்க சொல்கிறார். மறுநாள் மலர்விழி பள்ளிக்கு வரவில்லை. ஏன் வரவில்லை என்ற சந்தேகம் கௌதமுக்கு. நேரில் சென்று பார்த்து விடலாம் என்று நண்பனை அழைத்துக் கோண்டு மலர்விழி வீட்டிற்கு செல்கிறார்கள். மலர்விழி அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் என்று அமெரிக்கா சென்றுவிட்டதாக வாட்ச்மேன் முத்துராமன் சொல்லுகிறார். ஒரு சில நாட்களில் டிசியும் வாங்கி விட்டதை தெரிந்து மீண்டும் வாட்ச்மேனிடம் மலர்விழியைதொடர்பு கொள்ள போன் நம்பர் கேட்கிறார் கௌதம். அவர் தர மறுக்கிறார் என்றாவது ஒருநாள் மலர்விழி வருவார் என்று காத்திருக்கிறார் கௌதம். இந்த சூழ்நிலையில் மாமன் மகளான மணிஷா யாதவ் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தற்கொலை செய்து கொள்ள முயல அவரை காப்பாற்றுகின்றனர் அவரது அப்பா அம்மா. நண்பர்களின்யோசனையில் மலர்விழி வரமாட்டால் ஒருவைளை வந்தால் திருமணம் அவளுக்கு ஆகியிருக்கும் என சொல்லி மனிஷா யாதவை தாலி கட்ட வைக்கின்றனர்.ஆனால் மலர்விழி திருமணமாகாமல் கௌதமை கல்யாணம் செய்துகொள்ளவைண்டும் என்ற ஆசையில் வருகிறார். மவர்விழி. வந்த பிறகு என்ன நடக்கிறது? பிரஜன் என்ன முடிவெடுத்தார்? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
கௌதமாக சிறுவயது பையனுமாக நடித்தவரும் வளர்ந்த பிறகு பிரஜன் அவர்களும் சிறப்பாக நடித்துள்ளார்கள். கதாநாயகியாக பள்ளி போர்ஷனில் யுவலட்சுமி சிறப்பாக நடித்துள்ளார். இன்னொரு நயன்தாராவாக வலம் வருவார். மற்றும் இதில் நடித்த சினாமிகா, யுவலட்சுமி ரெடின் கிங்ஸ்லி ரோஹித் மனோபாலா டைரக்டர் ஆர் வி உதயகுமார் , மதுமிதா பி எல் தேனப்பன் முத்துராமன் ரஞ்சன் குமார் தீக்குச்சி தண்டபாணி என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.
ராஜா பட்டாசார்ஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு அழகு.
இளையராஜாவின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது.
ஆசிஷ் படத்தொகுப்பில் முனிகிருஷ்ணன் கலை வடிவமைப்பில் பிரதீப் தினேஷ் மாஸ்டரின் சண்டை காட்சியமைப்பில் தினேஷ் மற்றும் தீனா மாஸ்டர்களின் நடன அமைப்பில் கவிஞர்கள் இளையராஜா பழநிபாரதி சினேகன் பாடல் வரிகளில் முதல் காதல் முழுமையாக செழுமையாக செதுக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையில் அவரே எழுதிய ஒரு பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியிருப்பது இந்த படத்தின் சிறப்பு.
பள்ளிப் பருவத்தில் ஏற்படும் முதல் காதல் மண்ணுக்குள் போகும் வரை மறக்காது என்பதை
நினைவெல்லாம் நீயடா படத்தில் ஒரு உருக்கமான உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டு காதலர்கள் கொண்டாடும் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆதிராஜன். பாராட்டுக்கள்.