ஆர்யாமாலா திரைவிமர்சனம்
வடலூர் J சுதா ராஜலஷ்மி, ஜேம்ஸ் யுவன் தயாரிப்பில்
R S கார்த்திக், மணிஷாஜித், எலிசபெத், சிவசங்கர், ஜேம்ஸ்யுவன், தவசி , மணிமேகலை , மாரிமுத்து மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ஆர்யமாலா
கதை
1982-ல் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம்
கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பெற்றோர் மற்றும் தங்கையுடன் வசிக்கும் நாயகி மனிஷாஜித். கதாநாயகி காலம் கடந்தும் பூப்பெய்தவில்லை. கடவுளிடம் தினம் வேண்டுகிறார். அதற்காக தினமும் மருந்தும் சாப்பிடுகிறார். இந்த சூழ்நிலையில் கனவில் நாயகன் ஆர்.எஸ்.கார்த்திக் வருகிறார். கனவில் கண்டதும் காதல் கொள்ளும் நாயகி கனவு கலைந்த பிறகும் நாயகனை நினைத்துக் கொண்டிருக்கிறார்.இந்த சூழ்நிலையில்
தெருக்கூத்து கலைஞராக ஆர்.எஸ்.கார்த்திக், கதாநாயகி ஊர் கோவில் திருவிழாவில் தெருக்கூத்து போடுவதற்காக நாயகியின் கிராமத்திற்கு வருகிறார். கனவில் கண்டவரை நிஜத்தில் பார்த்ததும் நாயகி தன்னை அறியாமலயே தன் காதலை கண்கள் மூலமாக மனிஷாஜித்துக்கு வெளிப்படுத்த, நாயகி தன்மீது காதல்கொள்வதை அறிந்துக் கொள்ளும் ஆர்.எஸ்.கார்த்திக்கும் அவரை காதலிக்க தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் நாயகன் நாயகியிடம் தன் காதலை சொல்ல நாயகியோ நாயகனின் காதலை நிராகரிப்பதோடு, அவரை அவமானப்படுத்தும் விதமாக பேசி விடுகிறார்.
நாயகியின் இத்தகைய நடவடிக்கைக்கு காரணம் புரியாமலும், காதல் கைகூடாததாலும் தவிக்கும் நாயகன், ஆர்.எஸ்.கார்த்தி, தெருக்கூத்தின் இறுதி நாளில் மீண்டும் நாயகியை சந்தித்து தனது காதல் பற்றி பேச முயற்சிக்கும் போது, நாயகி மனிஷாஜித்தின் மாமா அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார். அவரிடம் இருந்து நாயகியை நாயகன் காப்பாற்றினாரா?, கனவில் காதலிக்க தொடங்கியவர்களின் காதல் நிஜத்தில் ஜெயித்ததா? இல்லையா? என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருப்பதுதான் ‘ஆர்யமாலா’. படத்தின் கதை
நாயகனாக நடித்திருக்கும் ஆர்.எஸ்.கார்த்திக், இயல்பாக நடித்து இருக்கிறார். தெருக்கூத்தில் காத்தவராயனாக நடித்தும் அசத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மனிஷாஜித், தனக்கு இருக்கும் பிரச்சனையை நினைத்து அவர் வருந்துவதும், கனவில் வந்தவரை மனதில் நினைத்துக் கொண்டு வெட்கப்படுவதும் உருகுழதும் என இயல்பான நடிப்பின் மூலம் மலர் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
நாயகியின் தாய்மாமனாக நடித்திருக்கும் ஜேம்ஸ் யுவன் நடிப்பிலும் நடனத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மாரிமுத்து, வில்லனாக மிரட்டியிருக்கிறார். நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் எலிசபெத், தெருக்கூத்து குழுவின் வாத்தியராக நடித்திருக்கும் நடன இயக்குநர் சிவசங்கர், ஊர் பெரியவராக நடித்திருக்கும் தவசி, நாயகியின் தங்கையாக நடித்திருக்கும் மணிமேகலை உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி சரியாக நடித்திருக்கிறார்கள்.
கிராமத்தில் நடக்கும் காதல் கதையை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் ஜெய்சங்கர் ராமலிங்கம்,
இசையமைப்பாளர் செல்வநம்பியின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்
நாயகியை முதன்மைப்படுத்தி நகரும் கதையில், தனது திரைக்கதை மற்றும் வசனம் மூலம் பெண்களின் காதலை மிக அழுத்தமாகவும், அழகாகவும் பதிவு செய்திருக்கிறார் படத்தின் இணை இயக்குநர் ஆர்.எஸ்.விஜய பாலா.
சிறிய பட்ஜெட்டில், வளர்ந்து வரும் கலைஞர்களை வைத்துக் கொண்டு, உண்மை சம்பவத்தை அழகான காதல் கதையாகவும், பெண்களின் மனபோராட்டங்களில் இதுவரை சொல்லப்படாத ஒரு விஷயத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்றார்கள். பாராட்டுக்கள்.