ஸ்ரீராம் அனந்தஷங்கர் இயக்கத்தில் விஸ்வத், சுனைனா , நாக விஷால், ஜெகன், காத்தாடி ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ராக்கெட் டிரைவர்.
கதை
ஒரு ஆட்டோரிக்ஷா ஓட்டுநர், தனது குறைபாடுகளின் பங்குடன், வாழ்க்கையின்) பல்வேறு அம்சங்களில் தனது அதிருப்தியை அடிக்கடி வெளிப்படுத்துகிறார். உலகை மாற்ற வேண்டும் என்று அவருக்கு ஆசை கனவு. ஆனால் அதைப் பற்றி எதுவும் செய்யத் தெரியவில்லை அவருக்கு. இந்த சூழ்நிலையில் நான் அப்துல்கலாம் என்று கதாநாயகன் ஆட்டோவில் ஏறிய சிறுவன் சொல்கிறான். அவன் சொல்வது உண்மைதானா? என்று கண்டுபிடிக்க கதாநாயகன் விஸ்வத் அந்த சிறுவனுடன்(நாக விஷால்) பயணிக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே சுவாராஸ்யமான படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக விஸ்வத் அப்துல்கலாம் கேரக்டரில் தேசிய விருது பெற்ற நாக விஷால், மற்றும் சுனைனா,காத்தாடி ராமமூர்த்தி, ஜெகன் என எல்லோரும் கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளனர். கௌசிக் கிரிஷ்ஷின் இசை ரசிக்கவைக்கிறது. ரெஜிமெல் சூர்யா தாமஸ்ஸின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
எல்லோரும் ரசிக்கும்படி வித்தியாசமான கதையை
ஸ்ரீராம் ஆனந்தசங்கர் எழுதி இயக்கியுள்ளார். பாராட்டுக்கள்.