BTG Universal
மற்றும்
White Nights Entertainment &
Gnanamuthu Pattarai
இணைந்து
வழங்கும்
Bobby பாலச்சந்திரன்
விஜய் சுப்பிரமணியம்
மற்றும்
RC ராஜ்குமார்
தயாரிப்பில்…
ரெட் ஜெயன்ட்
மூவிஸ்
வெளியீட்டில்…
R. அஜய் ஞானமுத்து
இயக்கத்தில்…
சாம் C.S
இசையில்…
ஹரிஷ் கண்ணன்
ஒளிப்பதிவில்…
அருள்நிதி,
பிரியா பவானி ஷங்கர்,
அர்ச்சனா ரவிச்சந்திரன்,
Tsering Dorjee,
அருண் பாண்டியன்
முத்துகுமார்
மற்றும்
பலர் நடித்து வெளியாகியிருக்கும்
டிமான்ட்டி காலனி – II
கதை
முதல் பாகத்துக்கு ஆறு வருடங்களுக்கு முன்னர் தொடங்கும் இந்தக் கதையில் டெர்பியின் (பிரியா பவானி ஷங்கர்) காதல் கணவரும் அவரின் நண்பர்களும் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆறு வருடங்களுக்குப் பிறகும் அவரைப் பிரிந்த துயரம் தாங்காமல் சீனத் துறவி ஒருவரின் உதவியுடன் அவரின் ஆவியிடம் பேச முயல்கிறார் டெர்பி. இந்த முயற்சி டெர்பியை முதல் பாகத்தின் நாயகன் சீனிவாசனின் (அருள்நிதி) கதையோடு இணைத்துவிட, இறந்துவிட்ட அவரை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்பு ஒன்று உருவாகிறது. சீனிவாசனின் பின்கதையை ஆராய்கையில் அவருக்கு ரகு (இன்னொரு அருள்நிதி) என்ற சகோதரன் இருப்பது தெரிய வருகிறது. டெர்பி – ரகு கூட்டணி, சீனத் துறவி மற்றும் நண்பர்கள் உதவியுடன் சீனிவாசனை உயிருடன் மீட்டார்களா? இல்லையா? அவர்களைத் துரத்தும் ஆபத்து நிஜத்தில் என்ன என்பதற்கெல்லாம் பதில் சொல்வதுதான் டிமாண்டி காலணி 2 படத்தின் கதை
அருள்நிதி இரண்டு வேடங்களில் கொடுத்த கேரக்டரை மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.
காதல் கணவரை இழந்த துயரம், அமானுஷ்யங்களில் மாட்டிக்கொள்ளும் இடங்களில் பதற்றம், புதிர்களைப் புரிந்து கொள்ளும் சாமர்த்தியம் என பிரியா பவானி ஷங்கர் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். மற்றும் முத்துக்குமார் அருண் பாண்டியன், சீன நடிகர் செரிங் டோர்ஜி. பிக்பாஸ் சீசன் 7 புகழ் அர்ச்சனா என இதில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். சாம் சி.எஸ்ஸின் இசை படத்தினை ரசிக்கவைக்கிறது.
இயக்குநர் அஜய் ஞானமுத்து டிமாண்டி காலணி முதல் பாகத்தை போலவே இரண்டாவது பாகத்தையும் எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியுள்ளார். பாராட்டுக்கள்.