சுரேஷ் நந்தா தயாரிப்பில் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் வேலா ராமமூர்த்தி, மாரிமுத்து, சுரேஷ் நந்தா, நந்தனாஆனந்த்,ரமா, செந்தி குமாரி, தீபாசங்கர் மற்றும் பலர் நடித்து ஆகஸ்ட் 9ல் வெளியாகும் படம் வீராயி மக்கள்.
கதை
வீராயிக்கு மூன்று மகன் ஒரு மகள் என்று சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். ஒரு மகன் சென்னைக்கு படிக்க சென்ற இடத்தில் கல்யாணம் செய்து கொண்டதால் அவரிடம் பேச்சு வார்த்தை இல்லை இரண்டாவது மருமகள் குடும்பத்தில் சரியில்லை. அவரால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் மழையில்லிததால விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலையில் குடும்பத்தை காக்க மூத்த மகன் குடும்பம் திருப்புருக்கு வேலைக்கு செல்கிறார்கள். மூத்த மகன் சம்பாதித்து அனுப்பும் பணத்தில் தாயை விராயியை சின்ன மருமகள் கவனிக்காததாலும் சொந்த மகளும் கவனிக்காததாலும் வீராயி கோயிலில் பிச்சை எடுத்து சாப்பிடும் சூழ்நிலை தெரிந்து மூத்த மகன் குடும்பம் ஊருக்கு வருகிறார்கள். சின்ன மருமகள் சொத்தை பிரித்து தர சொல்லி ஊர் பஞ்சாயத்து வைக்கிறாள். சொத்து பிரித்து கொடுக்கப்படுகிறது. இந்த வேதனையில் வீராயி இறக்க அந்த சம்பவத்தில் அண்ணன்(வேலாராமமூர்த்தி) தம்பி (மாரிமுத்து) தங்கை(தீபா) குடும்பம் பிரியும் சூழ்நிலை ஏற்படுகிறது. சுரேஷ் நந்தா காதலால் பிரிந்த குடும்பம் எப்படி சேர்கிறார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.
வேலா ராமமூர்த்தி, மாரிமுத்து, தீபா,சுரேஷ் நந்தா என இதில் நடித்த அனைவருமே அவரவர்க்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்கள். வீராயியாக நடித்தவரின் நடிப்பும் அருமை.தீபன் சக்ரவர்த்தியின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் படத்திற்கு பெரிய பலம். சீனிவாசனின் ஒளிப்பதிவு அருமை.
கிழக்கு சீமையிலே, மாயாண்டி குடும்பத்தார் வரிசையில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக உறவுமுறைகள் அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தி நல்ல படமாக கொடுத்துள்ள இயக்குநர் நாகராஜ் கருப்பையாவுக்குக்கும் தரமான படத்தை கொடுத்ததோடு நாயகனாக நன்றாக நடித்ததற்கும் சுரேஷ் நந்தாவுக்கும் பாராட்டுக்கள்.