விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி சரத்குமார், சத்யராஜ், மெகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்து வெளியாகி இருக்கும் படம் மழை பிடிக்காத மனிதன்.
கதை
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட அமைச்சர் ஏ.எல்.அழகப்பன் மகனை சலீம் (விஜய் ஆண்டனி) கொலை செய்கிறார். விஜய் ஆண்டனியை பழிவாங்க விஐய் ஆண்டனியும் அவரது மனைவி தியாவும் செல்லும் காரின் மீது தாக்குதல் நடத்துகிறார் அமைச்சர். இதில் விஷய் ஆண்டனி மனைவி தியா இறக்க, விஜய் ஆண்டனியின் மொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாறுகிறது. இந்த சம்பவம் ஒரு மழை நாளில் நடப்பதால் ‘மழை பிடிக்காத மனிதனாகி’ விடுகிறார் விஜய் ஆண்டனி.
இந்த சந்தர்ப்பத்தில், அமைச்சரிடமிருந்து விஜய் ஆண்டனியை காப்பாற்ற, விஜய் ஆண்டனியை இறந்ததாகப் பொய் சொல்லி, அவரை அந்தமானிலுள்ள ஒரு தீவு நகரில் விட்டுச் செல்கிறார் விஜய் ஆண்டனியின் நண்பரான சீஃப் சரத்குமார். அந்தமானில் அடையாளமற்று வாழப் பழகும்
விஜய் ஆண்டனிக்கு
ப்ருத்வி அம்பார், மேகா ஆகாஷ் என்ற இரண்டு நண்பர்கள் கிடைக்கிறார்கள். இந்நிலையில், இந்த இருவருக்கும் அந்நகர கந்துவட்டி தாதாவான டாலி தனஞ்செயனாலும் காவல்துறை அதிகாரியான முரளி சர்மாவாலும் பிரச்னை வர, அதைச் சரி செய்யக் களமிறங்குகிறார் விஜய் ஆண்டனி . இதனால் அடையாளத்தை மறைத்து வாழும் விஜய் ஆண்டனிக்கு என்னென்ன பிரச்னைகள் வருகின்றன, அவற்றை எப்படிச் சமாளித்தார் என்பதே படத்தின் மீதிக்கதை
பெரிய அழுத்தமான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் விஜய் ஆண்டனி, சிறப்பாக நடித்ததோடு ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார் தன் நக்கலான நடிப்பால் சிரிக்கவும், சில இடங்களில் மிரட்டவும் செய்கிறார் முரளி சர்மா. ப்ருத்வி அம்பார், மேகா ஆகாஷ் நன்றாக நடித்துள்ளனர். டாலி தனஞ்செயன் வில்லனாக கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். சரத்குமார், சத்யராஜ், ஏ எல்.அழகப்பன், இயக்குநர் ரமணா, சரண்யா பொண்வண்ணன் என இதில் நடித்த அனைவருமே அவரவர்க்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.
அச்சு ராஜாமணி மற்றும் விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்.விஜய் மில்டனின் ஒளிப்பதிவு சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறது.சுப்ரீம் சிவா, மகேஷ் மாத்யூ, கெவின் குமார் ஆகியோரின் ஆக்ஷன் காட்சிகள் அருமை.
அடையாளத்தை மறைத்து, புதிய ஊரில் வாழும் கதாநாயகன், அங்கே கிடைக்கும் புதிய உறவுகள், அவர்களுக்கு வரும் பிரச்னை, அதற்காகக் களமிறங்கும் கதாநாயகன், படையெடுத்து வரும் பழைய பகை எனப் பழகிய மையக்கதையை, அந்தமான் பின்னணியுடன், புதுமையான ஆக்ஷன் மேக்கிங்குடன் எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக கொடுத்துள்ளார் இயக்குநர் விஜய் மில்டன். பாராட்டுக்கள்