Chutney Sambar Web Series Review

Chutney Sambar Web Series Review

ஐசரி K கணேஷ் தயாரிப்பில் பிரபல இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் யோகிபாபு, கயல் சந்திரன், நிதின் சத்யா, வாணி போஜன், மைனா நந்தினி, முராகிருஷ்ணன், தீபா சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியாகியிருக்கும் வெப் சீரிஸ் தான், சட்னி சாம்பார்! டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது.

கதை

ஊட்டியில் பிரபல அமுதா கஃபே ஓட்டலின் உரிமையாளரான நிழல்கள் ரவியின் சாம்பாருக்கு அந்த ஊரே அடிமை. இன்னும் சிலர், அந்த சாம்பார் சாப்பிடுவதற்காகவே ஊட்டி வருகிறார்கள். அப்படிப்பட்ட அந்த புகழ் பெற்ற ஓட்டலின் உரிமையாளரான நிழல்கள் ரவி, திடீரென படுத்த படுக்கையாகிறார். தனது மகன் கயல் சந்திரனை அழைத்து ஒரு ரகசியம் கூறுகிறார்
சென்னையில் தனக்கு அமுதா என்கிற பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், தங்களுக்கு ஒரு மகன் இருப்பதாகவும், சாவதற்குள் அவனை அழைத்து வருமாறு கூறுகிறார். உடனே தன் தங்கை கணவர் நிதின் சத்யா உடன் சென்னை புறப்பட்டு, தன் தந்தையின் மூத்த மகனான ரோட்டுக் கடை யோகி பாபுவை கண்டுபிடிக்கிறார். தள்ளுவண்டி டிபன் கடை நடத்தி வரும் யோகிபாபுவின் சட்னிக்கு அங்கு ஒரு கூட்டமே அடிமையாக இருக்கிறது.

தன் தாய் இறந்து போன நிலையில், தங்களை புறக்கணித்த தந்தை மீது கடும் கோபத்தில் இருக்கும் யோகி பாபுவை கட்டாயப்படுத்தி ஊட்டிக்கு அழைத்து வந்து தந்தையின் ஆசையை நிறைவேற்றுகிறார் சந்திரன். அந்த நொடியே தந்தை இறந்து போக, அவருக்கு காரியம் செய்துவிட்டு 16 நாட்களுக்குப் பின் செல்லுமாறு யோகிபாபுவை கட்டாயம் செய்கிறார் சந்திரன்.

தந்தையின் இரண்டாவது மனைவி மற்றும் மகள் குடும்பத்தினர் அவரை ஏற்றார்களா, பிடிப்பு இல்லாமல் தங்கும் யோகி பாபு, தன் தந்தையை மன்னித்து அவரது குடும்பத்தை ஏற்றாரா என்பது தான் கதை.

தனக்கு என்ன வருமோ, எதை செய்தால் நன்றாக இருக்குமோ என்பதை புரிந்து அதை சிறப்பாக செய்திருக்கிறார் யோகிபாபு. தம்பியாக வரும் கயல் சந்திரனும், தங்கையாக வரும் மைனா நந்தினும், மைத்துனராக வரும் நிதின் சத்யாவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மற்றும் மீரா கிருஷ்ணன், தீபாசங்கர் என இதில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள்.

சந்திரன் குடும்பத்துடன் நெருக்கமாக இருக்கும் சார்லி மகளாக வரும் வாணி போஜனின் நடிப்பும், அவரது தந்தை சார்லின் கதாபாத்திரமும் அருமை.
பிரசன்னா குமார் ஒளிப்பதிவு அருமை. அஜேஷின் இசை தொடரை ரசிக்கவைக்கிறது.

சட்னி சாம்பார் வெப் சீரிஸை
இயக்குனர் ராதா மோகன் எல்லோரும் ரசிக்கும்படி சொல்லி வெற்றி பெற்றிருக்கிறார். பாராட்டுக்கள்.

#chutnisambarseries
Comments (0)
Add Comment