Take a fresh look at your lifestyle.

ரஜினிகாந்த் ரசிகர்களை கவுரவித்த கட்டீஸ் கேங் படக்குழுவினர்*

27

*ரஜினிகாந்த் ரசிகர்களை கவுரவித்த கட்டீஸ் கேங் படக்குழுவினர்*

தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போது மலையாள படங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு ஆகிய படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வசூல் ரீதியாக சாதனை படைத்தது. அந்த வகையில் தற்போது கட்டீஸ் கேங் என்ற மலையாள படம் தற்போது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

ஓசியானிக் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் அனில் தேவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கட்டீஸ் கேங். இதில் உன்னிலாலு, சவுந்தரராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர்களும், எழுத்தாளருமான ராஜ் கார்த்திக், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகர். ரஜினிகாந்த் படங்களை பார்த்து வளர்ந்தவர். இவர் ரஜினிகாந்த் அவர்களை வைத்து படம் இயக்க ஆசை. ஆனால், அது நிறைவேறாமல் இருக்கிறது. இருப்பினும், ரஜினிகாந்தை முன்னோடியாக வைத்து கட்டீஸ் கேங் என்ற படத்திற்கு கதை எழுதி இருக்கிறார்.

இதில் வரும் கதாநாயகன் ரஜினியின் தீவிர ரசிகராக நடித்து இருக்கிறார். இந்த படம் கேரளா மட்டுமில்லாமல் தமிழ் நாட்டிலும் வெளியாக இருக்கிறது. இதை கொண்டாடும் விதமாக சென்னை ரோகிணி தியேட்டரில் கட்டீஸ் கேங் படத்தின் டிரைலரை வெளியிட்டு இருக்கிறார்கள்.

மேலும் ரஜினிகாந்த் ரசிகர்களை கவுரவம் செய்யும் விதமாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ரஜினி காந்த் ரசிகர் மன்ற தலைவர் சினோரா அசோகன் மற்றும் ரோகிணி திரையரங்க உரிமையாளர் ரேவந்த்தும் தலைமை தாங்கினார்கள். கட்டீஸ் கேங் திரைப்படம் மே மாதம் 16 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் சவுந்தரராஜா, கட்டீஸ் கேங் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.