அருண் K பிரசாத் இயக்கத்தில்
எம் எஸ் பாஸ்கர், கபாலி விஸ்வந்த் ,நமோ நாராயணன், வெண்பா, பிரியதர்ஷினி அருணாச்சலம், ஆகாஷ் பிரேம்குமார், கார்த்திக் சந்திரசேகர் மற்றும் பலர் நடித்து மே 3 ல் வெளியாகும் படம் அக்கரன்
கதை
படத்தின் ஆரம்பித்தலேயே இரண்டு பேரை கடத்தி பழைய பங்களாவில் கட்டி வைத்து உண்மைகளை வரவழைக்க முயற்சி செய்கிறார் எம்.எஸ்.பாஸ்கர்.
ஃப்ளாஷ்பாக்கில்
தன் இரண்டு மகள்களுடன் வசித்து வரும் எம் எஸ் பாஸ்கர், முதல் மகளான வெண்பாவுக்கு மணமுடித்து வைக்க நினைக்கிறார். ஆனால் அவருக்கு ஏற்கனவே கபாலி விஸ்வந்துடன் திருமணப் பேச்சு வார்த்தை நடந்து முடிந்திருக்க அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருக்கிறார் வெண்பா.
இளைய மகள் பிரியதர்ஷினி மருத்துவம் படித்துக் கொண்டிருக்க, அதற்கான கோச்சிங் கிளாஸ் சென்ற நிலையில் காணாமல் போகிறார். செல்வாக்கு மிக்க அரசியல்வாதியான நமோ நாராயணனுக்கு சொந்தமான அந்த கோச்சிங் சென்டரில் விசாரித்ததில், சரியான பதில் கிடைக்காது போக ஒரு வழக்கறிஞரைப் பிடித்து காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர்.
அதற்கு விஷ்வந்தும் உதவி புரிகிறார் ஆனாலும் எந்த விதமான துப்பும் கிடைக்காத நிலையில், எம்.எஸ்.பாஸ்கர் கட்டி வைத்திருக்கும் அந்த இருவரும் பாஸ்கரின் தாக்குதலுக்கு பயந்து சில கொடூரமான உண்மைகளைச் சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.
இரண்டு பேரும் இரு வேறு விதமாக நடந்ததைச் சொல்ல, முடிவில் யார் சொல்வது உண்மை என கண்டறிந்து அந்த இருவரை என்ன செய்தார்? என்பதே மீதிக்கதை.
எம்.எஸ்.பாஸ்கர் இரண்டு பெண்களைப் பெற்ற தந்தையாக சிறப்பாக நடித்திருப்பதோடு வில்லன்களைப் பிடித்து கட்டி வைத்து உதைக்கும் நிலையில் அதிரடி ஆக்சன் ஹீரோவாகவும் அசத்துகிறார்.
வில்லன்களாக வரும் ஆகாஷ் பிரேம்குமாரும், கார்த்திக் சந்திரசேகரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.அரசியல்வாதியாக நமோ நாராயணன் சிறப்பாக நடித்துள்ளார், வெண்பா, பிரியதர்ஷினி என இதில் நடித்திருக்கும் அனைவருமே கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்கள்.
M A ஆனந்தின் ஒளிப்பதிவுபடத்திற்கு பெரிய பலம். ஹரி SR இசை ரசிக்க வைக்கிறது. பிண்ணனி இசை அமைத்த இருவர் நன்றாக செய்துள்ளார்கள்.
இயக்குநர் அருண் K பிரசாத் சஸ்பென்ஸ் திரில்லர் கதையை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாகசொல்லியுள்ளார்பாராட்டுக்கள்.