Take a fresh look at your lifestyle.

Ratnam Movie Review

31

ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ்,
மற்றும்
ஜீ ஸ்டுடியோஸ்,
மற்றும்
இன்வெனியோ ஆரிஜின்
வழங்கும்,
தயாரிப்பாளர்கள்…
கார்த்திகேயன் சந்தானம் ,
அலங்கார் பாண்டியன்
தயாரிப்பில்…
இயக்குனர்
ஹரி
இயக்கத்தில்..
இசையமைப்பாளர்
தேவி ஶ்ரீ பிரசாத்
இசையில்..
ஒளிப்பதிவாளர்
M. சுகுமார்
ஒளிப்பதிவில்…
விஷால்,
பிரியா பவானி ஷங்கர்,
கௌதம் வாசதேவ் மேனன்,
சமுத்திரகனி,
யோகி பாபு,
முரளி ஷர்மா,
ராமச்சந்திர ராஜு,
மோஹன் ராமன்
Faa முஸ்தபா
என பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம்
ரத்னம்.

கதை

சிறுவயதில் ரத்தினத்தை (விஷால்) காப்பாற்ற ரத்தினதின் தாய் மார்க்கெட்டில் வேலை செய்கிறார். விபச்சார லேடி கும்பல் ரத்தினத்தை கடத்தி வைத்துக்கொண்டு தாயை விபச்சாரத்தில் ஈடுபடவைக்கும்போது போலீஸாரால்கைது செய்யப்படுகிறார். இதனால்போலிஸ் நிலையத்திலேயே தற்கொலை செய்து கொள்கிறார். தாயை அடக்கம் செய்ய சமுத்திரக்கனி உதவுகிறார். தாயை இழந்த விஷால் தன்னை அரவணைக்கும் பன்னீர் செல்வத்துக்காக (சமுத்திரகனி) கொலை ஒன்றை செய்து விட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்துக்குச் செல்கிறார். தண்டனைக் காலம் முடிந்து அவர் வெளியே வரும்போது, எம்எல்ஏவாக மாறியிருக்கிறார் சமுத்திரக்கனி எம்.எல்.ஏ சமுத்திரகனியின் அடியாளாக இருக்கிறார் விஷால். ஊரில் யாராவது ஏதாவது தப்பு செய்தால் அவரை புரட்டி எடுக்கிறார் கொலை செய்கிறார். அவர் செய்த கொலைக்காகயோகிபாபு சிறைக்கு செல்வார். நீட் தேர்வு எழுத வந்த பிரியா பவானி சங்கரை பார்த்தவுடன் பிடித்து விடுகிறது. ஆனால் ப்ரியா பவானி ஷங்கரை ஒரு ஆந்திரா கூலிப்படை கும்பல் கொல்ல வருகிறது. இதை தெரிந்தகொண்ட விஷால் அவருக்கு பாதுக்காப்பு கொடுக்க, பிறகு தான் தெரிகிறது, ஒரு நிலப்பிரச்சனையில் ப்ரியா பவானி ஷங்கர் குடும்பத்தையே அழிக்க, ஆந்திராவின் ராயுடு பிரதர்ஸ் தேடி வர, இந்த பிரச்சனை தெரிந்து கொண்ட விஷால் பிரியா பவானி ஷங்கருக்கு ஆதரவாக இருக்கிறார். ராயுடு பிரதர்ஸ் விஷலை கொள்ள முயல்கிறது. அவர்களிமிருந்துதப்பித்தாரா விஷால்? ராயுடு பிரதர்ஸிடமிருந்து நிலத்தை மீட்டு ப்ரியா பவானி ஷங்கர் குடும்பத்தை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

விஷால் சண்டைக் காட்சிகளில் சிறமப்பட்டு நடித்து கைதட்டல் பெறுகிறார். நடனத்திலும் நடிப்பிலும் அத்துகிறார். பிரியா பவானி ஷங்கர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தைசிறப்பாக செய்துள்ளார். எம் எல் ஏ வாக சமுத்திரக்கனி சிறப்பாக நடித்துள்ளார். யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் வரும் இடங்கள் கலகலப்பு.கௌதம் வாசதேவ் மேனன்,
முரளி ஷர்மா,
ராமச்சந்திர ராஜு,
மோஹன் ராமன்
Faa முஸ்தபா. விஜயகுமார், ஜெயபிரகாஷ், கணேஷ் வெங்கட்ராமன், YG மகேந்திரன் என் இதில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
M சுகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பிளஸ். தேவி பிரசாத் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது. ஆக்ஷன் காட்சிகள் அசத்தல்.

இயக்குநர் ஹரி படம் என்றாலே கமர்ஷியல் கலந்து ஆக்ஷன் படத்தை எல்லோரும் ரசிக்கும்படி கொடுப்பார். இந்த படத்திலும் அதை நிறைவாக செய்துள்ளார். பாராட்டுக்கள்.