Take a fresh look at your lifestyle.

வல்லவன் வகுத்ததடா. திரைவிமர்சனம்

43

விநாயக் துரை தயாரித்து இயக்கும் படத்தில்
தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் மற்றும் பலர் நடித்து ஏப்ரல் 19 ல் வெளியாகும் படம் வல்லவன் வகுத்ததடா.

கதை

பணம் தான் முக்கியம் என்று பயணிக்கும் ஐந்து பேர் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஆனால், மற்றவர்களுக்கு உதவி செய்வதோடு, நேர்மையாக வாழ வேண்டும் என்று நினைக்கும் ஒருவர் வாழ்க்கையில் அனைத்தையும் இழந்ததோடு, மேலும் மேலும் துன்பப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.

இந்த ஆறு பேரும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்கள் என்றாலும் பணம் இவர்களுக்கிடையே தொடர்பை ஏற்படுத்துகிறது. அதனால் இவர்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை, விறுவிறுப்பாக சொல்வதே படத்தின் மீதிக்கதை.

தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
அனைவரும் கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன் நன்றாக நடித்துள்ளார்.
கார்த்திக் நல்லமுத்துவின்ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியரின் இசை ரசிக்க வைக்கிறது.

எழுதி இயக்கியிருப்பதோடு தயாரிக்கவும் செய்திருக்கும்  விநாயக் துரை, பிரமாண்டமான முறையில் சொல்லக்கூடிய திரைக்கதையை சிறு பட்ஜெட்டில் எடுக்கும் முயற்சியில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்.

நல்லது செய்தால் நல்லது நடக்கும்” என்ற விசயத்தை கருவாக வைத்துக்கொண்டு, 6 கதாபாத்திரங்களை சுற்றி நடக்கும் கதையை ஹைபர் லிங்க் பாணியில் எல்லோரும் ரசிக்கும்படி சுவராஸ்யமாகசொல்லியிருக்கும் இயக்குநர் விநாயக் துரைக்கு பாராட்டுக்கள். பார்க்க வேண்டிய படம்.