இயக்குநர் வெங்கடேஷ்வராஜ் இயக்கத்தில் கஜராஜ், பொளஷி ஹிதாயா,ரஞ்சிதா ராம், வினோத், ஜீவா ரவி, அனந்த்நாக் மற்றும் பலர் நடித்து வெளியாகும் படம் சிறகன்
11 கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையோடு வெளியாகிற படைப்பு. விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ‘சிறகன்.’
கதை
படத்தில் ஒபனிங்கில் ஒரு பெண் கொலை செய்யப்பட அந்த கொலையை யார் செய்தார் என போலிஸ் விசாரணையை ஆரம்பிக்கிறது. அதே சமயத்தில்
பணபலமும் அரசியல் பலமும் கொண்ட MLA தன் மகனை காணவில்லை என தேடியலைகிறார். ஒரு கட்டத்தில் அவர் கொலை செய்யப்பட, அந்த விவகாரத்தில் பிரபலமான வழக்கறிஞர் காளிதாஸ் போலீஸ் விசாரணைக்கு ஆளாகிறார். அந்த வழக்கறிஞரின் மகள் கோமாவில் இருக்கிறார். காவல்துறை அதிகாரியொருவர் தன் தங்கையின் உயிரிழப்புக்கு காரணம் யார் என கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கிறார். இப்படி செல்லும் கதையில் அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதே சுவாராஸ்யமானபடத்தின் மீதி திரைக்கதை.
வழக்கறிஞராக கஜராஜ், தன்னுடன் பணிபுரிகிற ஆசிரியரை, மாணவன் ஒருவன் தவறாக படமெடுத்து மிரட்டும்போது கொதித்துக் கொந்தளிக்கிற நாயகி பொளஷி ஹிதாயா, மாணவனின் மிரட்டலுக்குப் பயந்து மிரள்கிற ஆசிரியராக ஹர்சிதா ராம், தங்கையை இழந்த சோகத்தை சுமந்தபடி வழக்கு விசாரணையில் சுறுசுறுப்பு காட்டும் வினோத் ஜி டி, அரசியல் பலமிக்கவராக ஜீவா ரவி, அன்பான மனைவியின் உயிர் பிரிய காரணமாக இருந்த இழிபிறவிகளை சாதுர்யமாக வேட்டையாடும் ஆனந்த் நாக், படிக்கிற வயதில் காமவெறி தலைக்கேறி குற்றச் செயல்களில் ஈடுபடுகிற மாணவர்கள் என அனைவரின் நடிப்பும் கதையோட்டத்துக்கு பொருத்தமாக அமைந்து படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.
ராம் கணேஷ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது.
சேட்டை சிக்கந்தரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
இயக்குநர் வெங்கடேஷ்வராஜ் எடுத்துக் கொண்ட கிரைம் திரில்லர் கதையை எல்லோரும் ரசிக்கும்படி சுவராஸ்யமாகசொல்லியுள்ளார்பாராட்டுக்கள்.
கிரைம் திரில்லர்களுக்கு நல்ல விருந்து சிறகன்.