Take a fresh look at your lifestyle.

Romeo Movie Review

38

விஜய் ஆன்டனி
ஃபிலிம் கார்பரேஷன்,
மற்றும்
குட் ஈவில்
புரொடக்ஷன்
வழங்கும்,
தயாரிப்பாளர்
மீரா விஜய் ஆன்டனி
தயாரிப்பில்…
ரெட் ஜெயன்ட்
மூவீஸ்
வெளியீட்டில்….
இயக்குனர்
விநாயக் வைத்தியநாதன்
இயக்கத்தில்…
இசையமைப்பாளர்
பரத் தனசேகர் இசையில்
ஒளிப்பதிவாளர்
ஃபரூக் J பாஷா
ஒளிப்பதிவில்…
விஜய் ஆன்டனி,
மிர்நாளினி,
யோகி பாபு,
VTV.கணேஷ்,
தலைவாசல் விஜய்,
இளவரசு,
சுதா,
ஶ்ரீஜா ரவி,
மற்றும்
பலர்
நடித்து வெளியாகியிருக்கும் படம்
ரோமியோ

கதை

விஜய் ஆண்டனி தன் குடும்பத்திற்காகவும் தன் எதிர்காலத்திற்காகவும் பணம் சம்பாதிக்க
தென்காசி கிராமத்திலிருந்து மலேசியா சென்று போதிய வருமானம் கிடைத்தவுடன்சொந்த ஊருக்கு வருகிறார். ஊருக்கு வந்த விஜய் ஆண்டனிக்கு திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகின்றனர் அப்பாவும் அம்மாவும், மாமா விடிவி கணேஷும். தனக்கு காதல் இன்னும் வரவில்லை. தனக்கு காதல் வரும்போது சொல்கிறேன் என்று சொல்ல. இந்த சூழ்நிலையில் தாத்தா இறப்புக்கு கதாநாயகி மிர்னாளினி ஊருக்குவர. அந்த இறப்பு சம்பத்தில் விஜய் ஆண்டனி மிர்னாளியை பார்த்தவுடன் காதல் கொள்கிறார். பின் மிர்னாளினியை திருமணம் செய்து கோண்டு அவர் ஆசைப்படி சென்னை குடியேறுகிறார் விஜய் ஆண்டனி. சென்னை வந்தவுடன்தான் தன் மனைவியான மிர்னாளிக்கு கதாநாயகி ஆகவேண்டும் என்ற லட்சியத்தை தெரிந்துகொள்கிறார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டணியிடம் டைவர்ஸ் கேட்கிறார் மிர்னாளினி. இப்படி இருக்கும் சூழ்நிலையில் தன் மனைவி மிர்னாளினி சினிமாவில் கதாநாயகியாகவேண்டும் என்ற லட்சியத்தை நிறைவேற்றினால் தன்னை புரிந்துகொண்டுஏற்றுக் கொள்வாள் என மனைவிக்காக தயாரிப்பாளாராகவும் நடிகனாவும் ஆகிறார். முடிவில் மிர்னாளினி விஜய் ஆண்டனியை கணவராக ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

விஜய் ஆண்டனி நடிப்பிலும் நடனத்திலும் சண்டைக் காட்சியிலும் சிறப்பாகநடித்துள்ளார். கதாநாயகியாக மிர்னாளினி கொடுத்த கதாபாத்திரத்தைசிறப்பாக செய்துள்ளார்.
மற்றும் இதில் நடித்திருக்கும் யோகி பாபு,
VTV.கணேஷ்,
தலைவாசல் விஜய்,
இளவரசு,
சுதா,
ஶ்ரீஜா ரவி, என அனைவரும் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.பரத் தனசேகர் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
ஃபரூக் J பாஷா
ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் சொல்ல வந்த கதையை எல்லோரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.