Nutmeg
புரொடக்ஷன்
வழங்கும்,
தயாரிப்பாளர்கள்
வருண் திரிபுரானெனி
மற்றும்
அபிஷேக் ரமிஷெட்டி, &
G.பிருத்வி ராஜ்,
தயாரிப்பில்…
ரோமியோ பிக்சர்ஸ்
வெளியீட்டில்….
இயக்குனர்
ஆனந்த் ரவிச்சந்திரன்
இயக்கத்தில்…
இசையமைப்பாளர்
ஜீ.வி. பிரகாஷ்,குமார்
இசையில்…
ஒளிப் பதிவாளர்
ஜெகதீஷ் சுந்தர மூர்த்தி
ஒளிப்பதிவில்…
பட தொகுப்பாளர்
ருகேஷ்
எடிட்டிங்கில்
கலை இயக்குனர்
பிரகதீஸ்வரன் பன்னீர் செல்வம்
கை வண்ணத்தில்…
ஜீ.வி. பிரகாஷ்,குமார்
ஐஸ்வர்யா ராஜேஷ்,
ரோஹினி,
தலைவாசல் விஜய்,
இளவரசு,
காளி வெங்கட் மற்றும்
பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் *DeAr*
கதை
கதாநாயகன் ஜி வி பிரகாஷ்க்கு சின்ன சத்தம் கேட்டாளே தூக்கம் வராது. கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் தூக்கத்தில் நல்லா குரட்டை லிட்டு தூங்குவார். ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு குறட்டை பழக்கம் உள்ளது என்பதை பெண்பார்க்க வரும் மாப்பிள்ளையிடம் உண்மையை சொல்வதால் யாரும் இவரை கல்யாணம் செய்து கொள்ள மறுக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் ஜிவி பிரகாஷ் ஐஸ்வர்யா ராஜஷை பெண்பார்க்க வருகிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் அம்மா பேச்சை கேட்டு குறட்டை பழக்கத்தை ஜிவியிடம் சொல்லவில்லை. திருமணத்திற்குபிறகு ஜிவிக்கு உண்மை தெரிந்து அவரோட தூக்கம் கெட்டு அவரோட வேளை போகும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் ஐஸ்வர்யா ராஜேஷை பிரிய டைவர்ஸ் வேண்டி கோர்ட்டுக்கு செல்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் டைவர்ஸ் தர மறுக்கிறார். முடிவில் ஜிவிபிரகாஷ் க்கு டைவர்ஸ் கிடைத்ததா? இல்லையா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஜி வி பிரகாஷ் நடிப்பிலும் நடனத்திலும் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து கைதட்டல் பெறுகிறார். காளி வெங்கட்டும் அவரது மனைவியாக நடித்தவரும் நன்றாக நடித்துள்ளனர். இளவரசு, தலைவாசல் விஜய், ரோகினி, கீதா கைலாசம் என இதில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள். ஜிவி பிராஷ் குமார் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது. ஜெகதீஷ் சுந்தர மூர்த்தியின்
ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் சொல்ல வந்த கதையை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியுள்ளார். பாராட்டுக்கள்.