Take a fresh look at your lifestyle.

ஒரு தவறு செய்தால்  .   திரைவிமர்சனம்

42

ஒரு தவறு செய்தால்  .   திரைவிமர்சனம்

 

மகேஷ் பாண்டியனின் கே.எம் பிக்சர்ஸ் தயாரிப்பில்          மணி தாமோதரன் இயக்கத்தில்,    உபாசனா  R C, எம்.எஸ் பாஸ்கர், நமோ நாராயணன், ஸ்ரீதர், ராம்ஸ்,தேனி முருகன், பாரி, சுரா சுரேந்தர் சந்தோஷ், தாசமிகா லஷ்மண் மற்றும் பலர் நடித்து          ஏப்ரல் 5 ஆம் தேதியில் வெளியாகும் படம் ஒரு தவறு செய்தால்  .
கதை
 நான்கு நண்பர்கள் கோயம்பேட்டில் உள்ள வீட்டில் தங்கி வந்தனர். வாடகை கட்டாததால்  வீட்டை விட்டு வீ ட்டு ஒனரால் வெளியேற்றப்படுகின்றனர். வீடு இல்லாமல் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு செல்கிறார்கள். மார்க்கெட்டில் வேலை பார்க்கும் ஒருவர் ஐடியா கொடுக்கிறார். இந்த நான்கு நண்பர்களும் அரசியல்வாதிக்கு எதிராக  விளையாட்டு விளையாட ஆரம்பிக்கிறார்கள்.இன்றைய டெக்னாலஜியை பயன்படுத்தி பணம் பறிக்க முயற்சி செய்கிறார்கள்,  பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
இதில் நடித்திருக்கும்  உபாசனா  R C, எம்.எஸ் பாஸ்கர், நமோ நாராயணன், ஸ்ரீதர், ராம்ஸ், தேனி முருகன், பாரி, சுரா சுரேந்தர் சந்தோஷ், தாசமிகா லஷ்மண் என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். ..K M ராயன் இசையில் பாடவ்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவு படத்திற்கு பெரியபலம். இயக்குநர் மணி தாமோதரன் ஓட்டுக்கு காசு வாங்காதீர்கள் என்ற கருத்தை வலிமையாக சொல்லி எல்லோரும் ரசிக்கும்படியான திரைக்கதையமைத்து  சுவாராஸ்யமாக கொடுத்துள்ளார் பாராட்டுக்கள்